ஏன் அப்படி பண்ணோம்னு இருக்கு, தயவு செஞ்சி என்னோட அந்த புகைப்படத்தை யாரும் பகிராதீங்க – மும்தாஜ் வேண்டுகோள்

0
450
- Advertisement -

நான் தற்கொலை செய்ய முயன்றேன் என்று நடிகை மும்தாஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை கவர்ச்சி நடிகைகள் பலர் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மும்தாஜ்.

-விளம்பரம்-

இவர் 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனை அடுத்து இவர் விஜய் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாகியிருந்த குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இன்றும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு தான் வருகிறது.

- Advertisement -

மும்தாஜ் குறித்த தகவல்:

அதனைத் தொடர்ந்து இவர் மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, காதலா காதலா, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, ஏழுமலை, லண்டன், வீராசாமி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

சினிமாவை விட்டு விலகிய மும்தாஜ்:

சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் கலந்து இருந்தார். ஆனால், இவரால் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை நீடிக்க முடியவில்லை. மேலும், இந்த நிகழ்ச்சியின் பிறகு இவர் மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின் இவர் நடிப்பையே நிறுத்திவிட்டார். அதோடு ஒரு பேட்டியில் சினிமாவில் விலகியது குறித்து மும்தாஜ் சொன்னது, நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு குர்ஆன் பற்றி நன்றாகவே தெரியும். அல்லா எனக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்றெல்லாம் கட்டளையிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மும்தாஜ் அளித்த பேட்டி:

அதன் காரணமாகத்தான் நான் சினிமாவில் சில விஷயங்களை செய்ய தவிர்த்தேன். அதோடு நான் சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் அல்லாஹ் தான் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மும்தாஜ் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர், எனக்கு ஒரு முறை இடுப்பு பகுதியில் அசைக்க முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டது. அந்த வலியால் நான் ரொம்பவே துடிதுடித்து போனேன். இதற்காக நான் நிறைய மருத்துவர்கள் பார்த்தேன். ஆனால், எந்த பலனும் அளிக்கவில்லை.

தற்கொலை செய்ய காரணம்:

அதற்குப்பின் மருத்துவ பரிசோதனையில் எனக்கு Auto Immune நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இந்த நோய் பாதிப்பினால் என்னால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. எதுவும் செய்ய முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். இந்த நோயினால் நான் மிகவும் மனமுடைந்து விட்டேன். தொடர்ந்து இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நான் அழுதெல்லாம் இருக்கிறேன். என்னுடைய அண்ணன், கணவர், கடவுள் ஆகியோர் தான் என்னை அதிலிருந்து மீட்க உதவி செய்தார்கள்.

மும்தாஜ் வேண்டுகோள் :

இல்லையென்றால் நான் தற்கொலை செய்ய முயற்சி செய்து இருப்பேன் என்று கூறியிருந்தார். மேலும், நான் சினிமாவில் ஆரம்ப காலத்தில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தேன். ஆனால், தற்போது ஏன் அப்படி எல்லாம் நடித்தேன் என்று தோன்றுகிறது. என் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்க முயற்சி செய்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. தயவு செய்து என்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை யாரும் பகிரம் வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

Advertisement