இப்படி இருவர் இருந்தார்களா, என வாய்பிளக்கும் அளவுக்கு வாழ்ந்த இருவர். தமிழ் சினிமாவின் முதல் இரட்டை இயக்குனர்க நினைவு நாள்.

0
147
- Advertisement -

இந்திய சினிமாவின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்- பஞ்சுவை குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய திரைப்பட உலகில் இரட்டை இயக்குனராக கலக்கியவர்கள் கிருஷ்ணன்- பஞ்சு. இவர்கள் இருவரும் இணைந்து 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார்கள். இவர்கள் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிறமொழி படங்களையும் இயக்கி இருக்கிறார்கள். .

-விளம்பரம்-

இயக்குனர் பஞ்சு அவர்கள் 1915 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அருகில் உள்ள உமையாள்புரத்தில் பிறந்தவர். இவர் ஆரம்பத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். பின் எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். அதேபோல் ரா. கிருஷ்ணன் 1909 ஜூலை 18ல் சென்னையில் பிறந்தவர். ஆரம்பத்தில் கோவையில் செயல்பட்டு வந்த பக்சிராஜா ஸ்டுடியோவில் (அப்போதைய கந்தன் ஸ்டுடியோ) கிருஷ்ணன் பணியாற்றினார்.

- Advertisement -

கிருஷ்ணன்- பஞ்சு திரைப்பயணம்:

மேலும், இந்த இரட்டை இயக்குனர்கள் ஆன கிருஷ்ணன்- பஞ்சு ஆகியோரில் கிருஷ்ணன் மூத்தவர். பஞ்சபாகேஷன் என்ற பஞ்சு இளையவர். 1944 இல் பூம்பாவை என்ற திரைப்படத்தை தான் இருவரும் இணைந்து முதன் முதலாக இயக்கியிருந்தார்கள். அதனை தொடர்ந்து கலைவாணர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுக்காக பைத்தியக்காரன் என்ற படத்தை இயக்கியிருந்தார்கள். பின் சி என் அண்ணாதுரை வசனத்தில் நல்லதம்பி படத்தை இயக்கினார்கள். இப்படி இருவரும் பல படங்களை இயக்கி இருந்தார்கள்.

கிருஷ்ணன்- பஞ்சு இயக்கிய முதல் படம்:

இந்த நிலையில் இன்று இயக்குனர் பஞ்சுவின் நினைவு தினம். இவருடைய நினைவு தினத்தில் பற்றி பலரும் அறியாத சில விஷயங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம். ராஜா சாண்டோ இயக்கத்தில் மனுநீதிச் சோழனின் கதை படமாகி இருந்தது. அந்த படம் சோழ மன்னன் தேரில் தன்னுடைய மகன் கன்றை கொன்று விடுகிறான். அதே போல தன்னுடைய மகனை கொலை செய்து நீதியை நிலைநாட்டுகிற கதை. அந்த படத்தின் ஒரு காட்சியில் பசு கயிற்றை இழுத்து மணியை அடிக்கும் காட்சி. இதை ராஜா சாண்டோ எத்தனை முறை எடுக்க முயற்சி செய்தும் நினைத்தபடி எடுக்க முடியவில்லை.

-விளம்பரம்-

கிருஷ்ணன்- பஞ்சுவின் சினிமா வாய்ப்பு:

இதை கவனித்த கிருஷ்ணன்- பஞ்சு ஐடியா கொடுத்திருந்தார்கள். அப்போது கோபத்தில் இருந்த ராஜா சாண்டோ அவர்களை திட்டிவிட்டார். ஆனால், இதையெல்லாம் கிருஷ்ணன் -பஞ்சு செவி கொடுத்து கேட்கவில்லை. பின்னர் கோபம் தணிந்த பிறகு அவர்களை அழைத்து அந்த காட்சி எடுக்கச் சொன்னார் ராஜா சாண்டோ. பசுவின் கொம்பில் கயிறு மாட்டி மணி அடிப்பதற்கு பதில் பசு தனது வாயில் கயிறை கவ்வி மணி அடிப்பது போல் அவர்கள் எடுத்திருந்தார்கள். ராஜா சாண்டோவுக்கு காட்சி ரொம்ப பிடித்து போனது. பின்னர் என்னுடைய அடுத்த படம் பூம்பாவை நீங்கள் தான் இயக்குகிறீர்கள் என்று கூறி அந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார்.

கிருஷ்ணன்- பஞ்சு இறப்பு:

இப்படி தான் இவர்கள் சினிமா துறையில் நுழைந்தார்கள். கலைஞரின் பராசக்தி திரைப்படத்தை இயக்கியதும் இவர்கள் தான். சிவாஜி என்ற அற்புத நடிகரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய வைத்ததும் இந்த இரட்டை இயக்குனர்கள் தான். இவர்களுடைய திறமையை பார்த்து ஹிந்தி படங்களையும் இயக்க வைத்தார் ஏவி மெய்யப்ப செட்டியார். கடைசிவரை இந்த இரட்டை இயக்குனர்கள் பிரியவில்லை. மரணத்தால்தான் இவர்களை பிரிக்க முடிந்தது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 இயக்குனர் பஞ்சு தன்னுடைய 69 வயதில் சென்னையில் இறந்தார். பஞ்சு இறந்த பின்பு கிருஷ்ணன் எந்த படத்தையும் இயக்கவில்லை. பின்பு 1997 ஆம் ஆண்டு 87 வயதில் கிருஷ்ணன் காலமானார்.

Advertisement