சினிமாவிற்கு வரும் முன்னே காதல், காதலருக்கு இருந்த ஒரே சந்தேகம், கண்ணியம் காத்து காதலில் வென்ற நதியாவின் லவ் ஸ்டோரி.

0
1009
- Advertisement -

தன்னுடைய காதல் திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து நதியா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நதியா. இவர் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் இவர் நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். ஷரீனா மொய்து என்ற இவரது பெயர் சினிமாவுக்கு சரியாக இருக்காது என்று நதிபோல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் நதியா என்று பெயரை வைத்தார்.

-விளம்பரம்-

பிறகு அதுவே அவரது பெயராக மாறியது. மேலும், நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தான் தமிழில் பூவே பூச்சூடவா என்ற பெயரில் பாசில் ரீமேக் செய்தார். இந்த படம் வெளியாகும் முன்பே மலையாளத்தில் நதியா பல படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் 1988 ஆம் ஆண்டு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் நதியா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

நதியா அளித்த பேட்டி:

இந்த நிலையில் தன்னுடைய காதல் திருமணம் குறித்து பேட்டியில் நதியா சொன்னது, என் கணவர் ஷெரிஷ். என் வீட்டின் பக்கத்தில் தான் இருந்தார். நானும் அவரும் கல்லூரிக்கு செல்லும் போது தான் எங்கள் இருவருக்கும் காதலில் ஏற்பட்டது. முதலில் நாங்கள் நட்பாக தான் இருந்தோம். அதற்கு பிறகு தான் எங்களுக்குள் காதல் வந்தது. பின் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து. நான் பல படங்களில் நடித்திருந்தேன். அவர் வெளிநாட்டில் அவருடைய படிப்பை தொடர சென்றிருந்தார். அந்த காலத்தில் போன் எல்லாம் கிடையாது.

நதியா காதல் கதை:

கடிதங்கள் மூலமாக தான் நாங்கள் இருவரும் எங்களுடைய காதலை பரிமாறிக்கொண்டோம். ஒரு கட்டத்தில் எங்களுடைய காதல் என்னுடைய அம்மாவிற்கு தெரிந்து விட்டது. பின் அவர் என்னுடைய அப்பாவிடம் சொன்னார். முதலில் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், நான் வேறு மதம், அவர் வேறு மதம். எப்படி எங்களுக்குள் ஒத்துவரும் என்று என்னுடைய பெற்றோர்கள் அதிகம் கவலைப்பட்டார்கள். அதோடு என்னுடைய பெற்றோர்கள் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் அவர்கள் சீக்கிரமாகவே எங்களுடைய காதலுக்கு கிரீன் சிக்கல் கொடுத்து விட்டார்கள்.

-விளம்பரம்-

கணவர் கேட்ட கேள்வி:

ஆனால், ஒரு நிபந்தனை விதித்தார்கள். அப்போது அவர் படித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு வேலைக்கு செல்ல வேண்டும். அதற்கு பிறகு தான் திருமணம் என்று சொன்னார்கள். எதிர்பார்த்தது போலவே அவரும் படித்து முடித்து நல்ல வேலைக்கு சென்றார். வேலை கிடைத்தவுடன் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அவர் திருமணம் செய்ததற்கு முன்பே, என்னிடம் சினிமாவுக்குள் நீங்கள் சென்று விட்டீர்கள். இனிமேல் உங்களால் மீண்டும் ஒரு சாதாரணமான வாழ்க்கை கொண்டு செல்ல முடியுமா என்று கேட்டார்? காரணம், அப்போது நான் பணம், புகழ், பெயர் எல்லாம் இருந்தது.

காதல் குறித்து சொன்னது:

இருந்தாலும், என்னுடைய குறிக்கோள் நான் காதலித்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் தான் இருந்தது. ஒருவேளை நான் மாறுவதற்கு நேரம் கேட்டு இருந்தால் என் வாழ்க்கை மாறி போயிருக்கும். இந்த காலத்தில் காதல் செய்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கிறது. காதலில் நீங்கள் ஒருவரை ஒருவர் கண்டிப்பாக மதிக்க வேண்டும். சில விஷயங்களை நாம் விட்டுக் கொடுத்து சென்று தான் ஆக வேண்டும். அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை சம்பந்தப்பட்ட நபரை பொறுத்துதான் அமையும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் மதிக்கும் பொழுது காதல் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார்.

Advertisement