‘பாதகத்தி என்னை ஒரு பார்வையால கொன்ன’ – நெட்டிசன்களை கவர்ந்த அதிதியின் லேட்டஸ்ட் வீடியோ.

0
4993
aditi
- Advertisement -

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
Shankar's daughter Aditi Shankar to make her silver screen debut with  Viruman | Entertainment News,The Indian Express

தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ஒரு மருத்துவர்.

இதையும் பாருங்க : புனித் ராஜ்குமாரின் அகால மரணம், விஜய்க்கு முன்பாக முந்திய அஜித் – தல எப்போதும் தங்க மனசு தான்.

- Advertisement -

டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் மற்றொரு மகளான அதிதி தற்போது சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் இவர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார்.

சூர்யாவின் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார் அதிதி. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜைகள் கூட நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் அதிதி சமீபத்தில் ‘ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஐயய்யோ’ பாடலை ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement