தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.
பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.
பார்வதியும் கேலிகளும் :
அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். ” உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை” என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.
தே போல இவரை பலரும் மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இப்படி இவர் குறித்து பல விதமான கேலிகள் இருந்தாலும் அதை மிகவும் எளிதாக கடந்து சென்றுவிடுகிறார் பாரு. யூடுயூப் பேட்டிகள் மூலம் பிரபலமடைந்த பார்வதிக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கூட வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார்.
பார்வதி பங்கேற்ற நிகழ்ச்சிகள் :
அதே போல சிவகுமாரின் சபதம் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருந்தார். மேலும், கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபாரப்பான ‘சர்வைவர்; நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்தார்.ஆனால், இந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டிக்கு செல்லவில்லை. மேலும், கடந்த ஆண்டு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்துகொண்டார்.
பார்வதி பதிலடி :
ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்தும் பாதியில் வெளியேறினார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி பதிவிடும் பதிவுகளுக்கு எந்த அளவிற்கு லைக்ஸ் வருகிறதோ அதே அளவு ஆபாச கமெண்டுகளை குவிகிறது. இப்படி ஒரு நிலையில் தனது யூடுயூப் பக்கத்தில் தனது பதிவிற்கு ஆபாச கமன்ட் செய்த அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோவிற்கு கீழ் பார்வதியின் பாலோவர் ஒருவர் ‘துப்பட்டா போடுங்க தோழி ஆனா leggings போடாதீங்க என்று சொல்லும் பூமர்கள் இருக்கும் நாட்டில் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்’ என்று கமண்ட் செய்து இருந்தார். இதற்கு பார்வதியும் ‘ஆம், என்னை நீங்கள் மகிழ்ச்சியடைய செய்துவிடீர்கள். கெளவமானவர்கள் நிறைந்து இருக்கும் இந்த நாட்டில் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.