குமுதா ஹாப்பி புகழ் நடிகை வீட்டில் நேர்ந்த சோகம் – அவரே பதிவிட்ட உருக்கமான பதிவு.

0
1470
nanditha
- Advertisement -

குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது நடிகை நந்திதா தான். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்க்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நந்திதா.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படம் மூலம் தான். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பெரும் பிரபலமடைந்தார். இந்த படத்திற்கு பின்னர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : கொஞ்சம் Chubby ஆயிட்டேன், சீக்கிரம் பழைய மாதிரி மாறிடறேன் – மீண்டும் நடிக்க வந்த NINI ரக்சா.

- Advertisement -

அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தனது தந்தை காலமாகி விட்டதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், 54 வயதான என் தந்தை திரு. சிவசாமி இறந்துவிட்டார் என்பதை என் நலம்விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக நடிகை நந்திதா, செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம்.

-விளம்பரம்-
Advertisement