சிவகார்த்திகேயன், அவர் படத்துல நடிக்க என்ன கூப்பிட மாட்டாரு, அதுக்கு காரணம் இதான் – லொள்ளு சபா மாறன்

0
27498
maran
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் எண்ணற்ற நடிகர்கள் பிரபலமானவர்கள் இந்த நிகழ்ச்சியின் நடித்த பல்வேறு நடிகர்கள் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகிறார் அவ்வளவு ஏன் நடிகர் சந்தானம் கூட லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தான் சினிமாவிற்கு சென்றவர் அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் அறியப்பட்ட ஒரு நபராக திகழ்ந்து வருபவர் காமெடி நடிகர் மாறன் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் அதிலும் சந்தானம் நடிக்கும் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் கூட நடித்திருந்தார் இந்த படத்தில் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது அதிலும் ‘இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல நீ’ என்ற ஒற்றை வசனம் தான் தற்போது மீம் மெடிரியலாக கூட மாறி இருக்கிறது.

இதையும் பாருங்க : குமுதா ஹாப்பி புகழ் நடிகை வீட்டில் நேர்ந்த சோகம் – அவரே பதிவிட்ட உருக்கமான பதிவு.

- Advertisement -

மேலும், படத்தில் இவரது காட்சிகள் அதிகம் வைத்து இருந்தால் படத்தில் காமெடி இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறி வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து இவர் பல ஆண்டுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி இருந்த ‘அது இது எது’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது செய்த காமெடியின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாறன் ‘சிவகார்த்திகேயன் அவர் படங்களில் நடிக்க என்ன கூப்பிட மாட்டார். அதர்க்கு காரணம், நான் பல வருடங்களாக சந்தானம் டீமுடன் இருக்கிறேன். அதனால் அவர் படத்தில் நடிக்க அழைத்தால் நன்றாக இருக்காது என்று எண்ணி விடுகின்றனர். விவேக்கின் பல காட்சிகளில் நடித்த செல் முருகன் மற்ற நடிகர்கள் படத்தில் நடிக்க மாட்டார். அதே போல தான், ஆனால் என்னை நடிக்க கூப்பிட்டால் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement