நஸ்ரியாவுடன் இருக்கும் இந்த பிரபல நடிகை யாருன்னு தெரியுதா ? பாத்தா ஷாக்காகிடுவீங்க.

0
1666
nazriya
- Advertisement -

மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை ஜோதிர்மயி. இவர் டிவி நிகழ்ச்சி மூலம் தான் தன் வாழ்கை பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் பலைட் என்ற மலையாள மொழி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார். இவர் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தலைநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் நடிகை ஜோதிர்மயி. அதன் பிறகு நான் அவனில்லை, சபரி, அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

jyothirmayi hot

இவர் தமிழில் கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெடிகுண்டு முருகேசன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக பசுபதி நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு இவர் மலையாள சினிமா பக்கமே சென்று விட்டார்.

- Advertisement -

பின் இவர் கல்லூரியில் தன் உடன் படித்த கம்ப்யூட்டர் எஞ்சினியர் நிஷாந்த் என்பவரை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2011 ஆம் ஆண்டு பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அமல் நீரத் அவர்கள் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பின்னர் பாலிவுட் படங்கள் சிலவற்றிற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கினார். இப்படி ஒரு நிலையில் நடிகை நஸ்ரியா, ஜோதிர்மயியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதை கண்ட பலரும் ஜோதிர் மயியா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement