நடிச்சது ரெண்டு Scene,இதுக்கு ஏன் இவ்ளோ சீன் – கேலி செய்த்தவர்களுக்கு அமீர் பாவனி கொடுத்த பதிலடி.

0
338
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் துணிவு படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வாங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். அஜித் முன்பு நடித்த படங்களை போல இப்படத்தில் ஒரு குழுவை வைத்து அஜித் கொள்ளையடிக்கிறார? என்றால் அங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர். வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார்.

-விளம்பரம்-

அவர்களுக்கு சவால் விடும் வேலையே அஜித் செய்து வருகிறார். வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருக்கிறார். சர்வதேச ஏஜெண்டாக செயல்படும் ஒரு கும்பல் ஏன்? இந்தியாவில் உள்ள ஒரு வங்கியை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர் என்பதும், அவர்கள் எதற்காக கொள்ளையடிக்கின்றனர்? அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் என்ன? என்பதை மையத்தமாக கொண்டு படம்

- Advertisement -

நடிகர்கள் :

இந்த படத்தை போனி கபூர் தயாரித்து, வலிமை, சதுரங்காக வேட்டை போன்ற படங்களை இஐக்கிய எச் வினோத் இயக்கியிருக்கிறார். இந்த படம் படம் `தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் நடித்த “வாரிசு” பாடத்துடன் ஒன்றாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி, அமீர் என பலர் இப்படத்தில் கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தில் பிக் பாஸ் பிரபலங்கள் :

அந்த வகையில் பிக் பாஸில் பிரபலமான காதல் ஜோடிகள் அமீர், பாவனி மற்றும் சிபி என மூவரும் துணிவு படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் படத்தில் படக்குழுவில் உள்ள பலர் பிரபல செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அந்த வகையில் துணிவு படத்தில் நடித்த அமீர் மற்றும் பாவனி இருவரும் சமீபத்தில் ஊடகம் ஒன்றில், தாங்கள் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அது சோசியல் மீடியாவில் படு பயங்கர வைரலானது.

-விளம்பரம்-

ட்ரோல்களுக்கு உள்ளன அமீர் பாவனி :

இந்த நிலையில் துணிவு படம் வெளியான நிலையில் பாவனி மற்றும் அமீர் இருவரும் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும்தான் தோன்றி இருந்தனர். இப்படி பட்ட நிலையில் தான் பலரும் “நீங்க படத்தில் வந்ததே இரண்டு நிமிடம் தான். அதற்கு எதுக்கு ஓவர் பில்டப். என்று இருவரையும் கேலி செய்யும் வகையில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அந்த ட்ரோல்களுக்கு பதிலாடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ட்ரோல்களுக்கு பதில் :

அவர்கள் கூறுகையில் அஜித் அவர்களுடன் நடிக்கிறோம் என்றதில் ஆனந்தத்தில் எந்த படம், எந்த கதை, என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்கவில்லை. படத்தில் எவ்வளவு நேரம் இருந்தோம் என்பதை விட அஜித் எங்களுடன் படத்திற்கு பிறகு மூன்று மணிநேரம் எங்களுக்கு அறிவுரை கூறினார். அதைத்தான் பெரிய விஷயம் தான் என்று நினைக்கிறோம். என்று அவர்கள் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

Advertisement