தன்னை விமர்சித்து கேலி கிண்டலமாக பேசிய நபர்களுக்கு நீலிமா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நீலிமா ராணி. உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார் நீலிமா. அதன் பின்னர் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் .பின் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
அதனை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி என்ற தொடரில் நடித்து இருந்தார்.
நீலிமா குடும்பம்:
இதனிடையே நீலிமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருக்கும் போது இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். அதவும் இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமாக மேட்டர்னிட்டி போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.
நீலிமா குழந்தை பெயர்:
அந்த புகைப்படத்தில் நீலிமா தாமரைமேல் ஒரு அழகான கர்ப்பிணி அம்மனாக இருக்கும் அவதாரத்தில் இருந்தார். இதை பார்த்து பலரும் நீலிமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த குழந்தைக்கு அத்வைதா என்று பெயர் சூட்டியிருந்தார்கள். மேலும் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்திருக்கும் 16 ஆகஸ்ட் 1947 என்ற படத்தில் நீலிமா நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் கௌதம் கார்த்திக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நீலிமா அளித்த பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் நடிகை நீலிமா ராணி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய திருமணத்திற்கு பின்னால் தான் நான் மகான் அல்ல படத்தில் நான் நடித்தேன். நான் இப்போது மீடியாவில் வளர்ந்து நிற்பதற்கு என்னுடைய கணவர் கொடுத்த ஆதரவும் உத்வேகம் தான் காரணம். என்னை பார்க்கும் அத்தனை பேருமே பார்த்து பேசி பாராட்டுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் சிலர் என்னை திட்டியும் இருக்கிறார்கள். நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க நினைத்தோம். ஆனால், அது நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை. இதனால் நாங்கள் எல்லாத்தையும் இழந்து வாடகை வீட்டிற்கு செல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.
விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
தாலி செயின் மட்டும் தான் என்னிடம் இருந்தது. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து 2017 ஆம் ஆண்டு ஒரு சீரியல் ஒன்றை தயாரித்தோம். அது 1100 எபிசோடுகள் சென்றது. மேலும், நான் இரண்டாவது குழந்தைக்கு பிறகு தான் நான் எடை போட்டு விட்டேன். அது குறித்து நான் நிறைய காரணங்கள் இருக்கின்றது. சில பேர் என்னுடைய மார்பகங்களை பற்றி எல்லாம் கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு உடனே நான், எனது குழந்தைகளுக்கு பால் கொடுத்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என தோன்றும். நான் சொல்லி என்ன ஆகப் போகிறது. அதெல்லாம் நான் கடந்து விட்டு வருகிறேன் என்று மன வேதனையில் கூறியிருக்கிறார்.