பிரபுவுக்கே ஜோடியாக நடித்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க?

0
582
- Advertisement -

நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை நடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அணிலா ஸ்ரீகுமார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் 1992 ஆம் ஆண்டு தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

-விளம்பரம்-

இவர் முதன்முதலாக மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. பின் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்து விட்டார். இவர் மலையாள தொடரில் தான் அதிகம் நடித்திருக்கிறார். அதன் பின் தமிழில் சின்னதம்பி சீரியலில் நடித்து இருந்தர்.

- Advertisement -

அணிலா குறித்த தகவல்:

இந்த சீரியல் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் காற்றின் மொழி, பாவம் கணேசன் போன்ற சில சீரியல் நடித்திருந்தார். தற்போது இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் மிரட்டி கொண்டு வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை.

சிறகடிக்க ஆசை சீரியல்:

முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. தற்போது சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் விழாவால் ஸ்ருதி-ரவி பிரிந்து விடுகிறார்கள். அடுத்து என்ன என்ற பல அதிரடி சுவாரசியங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் விஜயா கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அனிலா ஸ்ரீகுமார்.

அணிலா ஸ்ரீகுமார் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை அணிலா ஸ்ரீகுமார் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் முதன் முதலாக சின்னத்தம்பி சீரியலில் தான் நடித்தேன். அந்த சீரியல் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை வாங்கி கொடுத்தது. அந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு மூலம் தான் எனக்கு நிஜ சின்னத்தம்பி பிரபு சாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நான் ரொம்ப ஆசையுடன் ஒவ்வொரு காட்சியும் ரசித்து நடித்தேன். ஆனால், அந்த படம் வெளிவராமல் போனது. அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு தமிழ் படத்தில் ஆவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

Advertisement