செயலிழந்த உடல் உறுப்புகள். மரணப்படுக்கையில் பறவை முனியம்மா. வைரலாகும் புகைப்படம்.

0
30757
paravai muniyamma

நடிகை பரவை முனியம்மாவை பற்றி யாரும் அறிந்து விடாமல் இருக்க முடியாது விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக நடித்ததோடு அந்தப் படத்தில் சிங்கம் போல ஏ என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை பரவை முனியம்மா தமிழ் சினிமா துறையில் நடிகையாகவும் நாட்டுப்புற பாடகி யாவும் தெரிந்த வந்த நடிகை பரவை முனியம்மா மதுரையில் உள்ள பறவை என்னும் ஊரில்தான் பிறந்தார் இதனால்தான் அவருக்கு பரவை முனியம்மா என்ற பெயரும் வந்தது தூள் படத்தில் இவர் பாடிய மதுரை வீரன் தாண்டி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடைய இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் தேடி வந்தது.

paravai-muniyamma-health-in-critical-condition

தூள் படத்திற்கு பின்னர் காதல் சடுகுடு பூ தேவதையைக் கண்டேன் என்று 25 திரைப்படங்களுக்கு மேல் நடிகையாகவும் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் என்ற சமையல் நிகழ்ச்சியையும் நாட்டுப்புற பாடலை பாடிக்கொண்டே கிராமத்து உணவுகளை சமைத்து இவர் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம் நாட்டுப்புறப் பாடல்களுக்கு மிகவும் பெயர் பெற்ற பறவைமுனியம்மா வெளிநாடுகளில் கூட சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி இருக்கிறார் நாட்டுப்புற அலைகளுக்கு மத்தியில் பல்வேறு பாடல்களுக்கு பின்னர்தான் நாட்டுப்புற பாடல்கள் சினிமாவில் கூட வரத் துவங்கியது என்று சொன்னாலும் அதற்கு நிகர் இல்லை.

இதையும் பாருங்க : ஆட்டோகிராப் நடிகை கோபிகாவா இது. இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

- Advertisement -

இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு என்ற பாடலில் துவண்டு இருந்தாள் மேலும் அந்தப் பாடலில் ஒரு சில வரிகளையும் பாடியிருந்தார் பரவை முனியம்மா. அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. மான் கராத்தே படத்திற்கு பின்னர் பறவை முனியம்மாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் மதுரை பரவையில் தனது மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

தற்போது 85 வயதானசினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த அதே தருணத்தில் பரவை முனியம்மாவுக்கு ஒரு கட்டத்தில் வயது முதிர்வால் உடல்நலகுறைவு உடல் நலமும் குன்றியது. இதனால் வீட்டிலே முடங்கினார் பரவை முனியம்மா. இதை அறிந்த மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘பரவை’ முனியம்மாவை நேரில் அழைத்து அவருக்கு ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கி மாதந்தோறும் ரூ. ஆயிரம் வட்டியாக வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த பணமும் அவரது வைத்திய செலவிற்கே சரியாக போனது.

-விளம்பரம்-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல் நிலை மிகவும் மோசமானதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். லட்சக்கணக்கில் பணம் செலவாகிவிட்டதால் தற்போது மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் வீட்டிலே படுத்தப்படுக்கையாக உயிருக்குப்போராடி வருகிறார். உடல் நிலை சரியில்லாத போதிலும், நான் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருக்கிறேன். அதனால் எனக்கு வழங்கி வரும் நிதி உதவியை என்னுடைய இறப்புக்குப் பிறகு என்னுடைய மாற்றுதிறனாளி மகனுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று கூறியிருந்தார் பறவை முனியம்மா. தற்போது அவரது புகைப்படம் கூட வெளியாகியுள்ளது.

Advertisement