இயக்குனர் பாக்கியராஜ் வீட்டில் நேர்ந்த இழப்பு – சோகத்தில் குடும்பத்தினர்.

0
1951
bhag
- Advertisement -

இந்த 2020 ஆம் ஆண்டு ஒரு மிகவும் மோசமான ஆண்டாக இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கும் இது மோசமான ஆண்டு தான். இந்த ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்கள் வீட்டில் எத்தனையோ இழப்புகள். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் வீட்டிலும் சமீபத்தில் ஒரு இழப்பு நேர்ந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ்.

-விளம்பரம்-

இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் பாக்கியராஜ், பிரபல நடிகையான பூர்ணிமாவை கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்று இரு பிள்ளைகள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை பூர்ணிமாவின் தாயாரும் இயக்குனர் பாக்கியராஜின் மாமியாருமான சுப்பலட்சுமி ஜெயராம் சற்று முன்னர் இறந்துள்ளார். அவருக்கு வயது 85. வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுப்பலக்ஷ்மி இறந்தார் என்று வெளியாகியுள்ளது. இவரது இறுதி சடங்கு நாளை (செப்டம்பர் 2) நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

பிரபல நடிகையான பூர்ணிமா 70 காலகட்டம் துவங்கி நடித்து வருகிறார். 70 முதல் 80 காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார் பூர்ணிமா. திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்ட கொண்ட பூர்ணிமா ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும், கண்மணி சீரியலிலும் நடித்து வருகிறார்.

Advertisement