மீண்டும் டாஸ்மாக் திறப்பு – மகிழ்ச்சியில் பிரியா ஆனந்த். அது சரி ஏற்கனவே சரக்கடிக்கும் காட்சி பற்றி இப்படி சொன்னவர் தானே.

0
993
priya

தமிழகத்தில் பல நாட்கள் கழித்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த். இந்தியாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா தாக்கம் காரணமாக அடிக்கடி ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு இருக்கும் முழு ஊரடங்கு காரணமாக ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் கடந்த மாதம் (மே) 10-ந்தேதி முதல் மூடப்பட்டு இருக்கின்றன.பல மாநிலங்களில் ஊரடங்கில் கொண்டு வரப்பட்ட தளர்வுகள் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு  இருந்தன.

தமிழத்தின் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் மதுபிரியர்கள் பலர் தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்று மது குடித்து வந்தனர்.அதே போல சாராயம் காய்ச்சும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. முழு ஊரடங்கை ஜூன் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இதையும் பாருங்க : நீலிமா விலகிய சில நாட்களின் நிறுத்தப்பட்ட அரண்மனை கிளி சீரியல் – ஓராண்டிற்கு பின் காரணம் சொன்ன ஹீரோ.

- Advertisement -

கொரோனா தாக்கம் இருக்கும் நிலையில் டாஸ்மாக் மிக அவசியமா என்று பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில் மதுக்கடைகளை மீண்டும் திறந்ததற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக நடிகை பிரியா ஆனந்த் போட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தான் சந்தோசமாக சிரிக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ள பிரியா ஆனந்த், டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று அறிவித்ததும் என்னுடைய ரியாக்ஷன் இதுதான் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான அரிமா நம்பி படத்தின் ஒரு காட்சியில் ஹீரோவுக்கு நிகராக பிரியா ஆனந்த் மதுகுடிக்கும் காட்சி ஒன்று இடம்பெற்று இருந்தது. இந்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த படத்தின் இயக்குனர் ஆணும் பெண்ணும் சமம் என்பதால் தான் அந்த காட்சியை வைத்ததாக கூறி இருந்தார். மேலும் இதுகுறித்து பேசிய பிரியா ஆனந்த், அந்த காட்சியில் அப்படி நடித்தால் தான், நாம் சொல்ல வரும் கருத்து, மக்களை சென்றடையும் என, இயக்குனர் கூறியதால், அப்படி நடித்தேன்.அந்த காட்சியில் அப்படி நடித்தால் தான், நாம் சொல்ல வரும் கருத்து, மக்களை சென்றடையும் என, இயக்குனர் கூறியதால், அப்படி நடித்தேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement