சாமி, தங்கம்ன்னு சொல்றத கேலி பண்ணுறாங்க- ரஞ்சித் குறித்து கண்கலங்கி பிரியா ராமன் சொன்ன விஷயம்

0
201
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து நிகழ்ச்சியை இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக ஓட்டு பெற்று சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வந்து விட்டார். பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ரஞ்சித்தும் ஒருவர்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறார். இவரை வைத்து ரவீந்தர் செய்த பிராங்க் நன்றாக இருந்தாலும் அது தப்பாக போய் முடிந்திருந்தது. இதை விஜய் சேதுபதியும் கண்டித்திருந்தார். இருந்தாலுமே ரஞ்சித் குறித்து சில விமர்சனங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் ரஞ்சித் குறித்து அவரின் மனைவியும், நடிகையுமான பிரியா ராமன் பேட்டி, நான் பிக் பாஸ் 24 * 7 எல்லாமே மிஸ் பண்ணாமல் பார்க்கிறோம். இந்த சீசன் தான் நான் எதையும் மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னாடியும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்தேன். ஆனால், இந்த அளவிற்கு இன்வால்வ்மெண்ட் ஆகி பார்க்கவில்லை. விஜய் சேதுபதி வேற லெவலில் செய்கிறார்.

ரஞ்சித் குறித்த விமர்சனம்:

ரஞ்சித் முதலில் எல்லாரையும் அமைதியாக அப்சர்வ் பண்ணுவார். இப்போது அவரை ஆக்டிவாக பார்க்க முடிகிறது. இதற்கு முன்னாடியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஞ்சித்துக்கு வாய்ப்பு வந்தது. இந்த முறை கண்டிப்பாக விளையாட முடியும் என்றுதான் போனார். அவருக்குள் காமெடி திறமை நிறையவே இருக்கிறது. வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைப்பார். அதே சமயம் யாரையுமே காயப்படுத்த மாட்டார். டிவி எபிசோடில் அவர் செய்த சேட்டை எல்லாம் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவர் வீட்டில் இன்னும் ரகளை பண்ணுவார்.

-விளம்பரம்-

ரஞ்சித் குறித்து சொன்னது:

மேலும், அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். ஆனால், யாரையும் கலவரத்தை உண்டு பண்ணி பிரச்சனை செய்ய மாட்டார். எப்பவுமே அடுத்தவர்களிடம் குறை சொல்வதற்கு முன்னாடி நம்மிடம் அந்த தகுதி இருக்கான்னு பார்க்கணும் என்று சொல்வார். இதை கண்டிப்பாக பிக் பாஸில் சொல்லுவார் என்று எனக்குத் தோன்றுகிறது. நிகழ்ச்சிக்குள் நுழைந்து அவர் என்னிடம் கேமராவை பார்த்து இரண்டு முறை பேசினார். அவர் படும் கஷ்டத்தை பார்த்து எங்களுக்கும் கஷ்டமாக இருந்தது.

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

அவருக்கு ஃபேக் என்று ஸ்டிக்கர் ஒட்டின போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் பையன் ரொம்ப பீல் பண்ணி அழுது விட்டான். அதேபோல் அவர் சாமி, தங்கம் என்று சொல்வதை கலாய்ப்பதெல்லாம் அவனுக்கு பிடிக்கவே இல்லை. அதனால அவன் 24*7 பார்ப்பதே நிறுத்திவிட்டான். இப்ப பேசும்போதே நானே சாமி தங்கம்னு சொல்லி இருப்பேன். 20 வருஷம் ஒருத்தருடன் வாழும் போது அது வரத்தான் செய்யும். அது அவருடைய இயல்பு. அவர் வந்த வழியை மறக்கவில்லை. அதை கிண்டல் பண்ணினால் என்ன பண்றதுன்னு தெரியலை என்று பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement