லாண்டன் மருத்துவமனையில் மாஸ்க்குடன் கபாலி பட நடிகை. கொரோனாவா ?

0
2296
radhikaapte
- Advertisement -

இந்தியாவில் இதுவரை 1200கும் மேற்பட்டார் பேர் பாதிக்கப்பட்டும், 32 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கொரோனா சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே அவர்கள் லண்டன் மருத்துவமனையில் மாஸ் அணிந்து உள்ள படி இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

லண்டன் மருத்துவமனையில்  ராதிகா ஆப்தே

- Advertisement -

நடிகை ராதிகா ஆப்தே அவர்கள் 2012 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவரின் பெயர் பெனடிக்ட் டெய்லர். இவர்கள் இருவரும் 8 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே அவர்கள் லண்டன் மருத்துவமனையில் மாஸ் அணிந்து உள்ள படி இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

இதையும் பாருங்க : விஜய் மகள் திவ்யாவா இது. வெளியான அன்சீன் புகைப்படம். இணையத்தில் செம வைரல்.

அதில் அவர் கூறியிருப்பது, தனக்கு கொரோனா இல்லை. யாரும் பயப்படத் தேவையில்லை. இடது விரலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளேன். தோழி ஒருவர் கர்ப்பமாக இருப்பதால் அவரது சாதாரண பரிசோதனைக்காக அவருடன் வந்திருக்கிறேன். வழக்கமான பரிசோதனைக்காக வந்துள்ளேன். கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

தென்னிந்தியா மொழிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு மராத்தி மொழியில் வெளிவந்த படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் தமிழில் ரஜினியுடன் கபாலி, தோனி உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : இரவில் பைக்கில் சென்று 40 நாய்களுக்கு உணவழித்த பிக் பாஸ் நடிகை. வீடியோ இதோ.

அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்துள்ளார் ராதிகா அப்டே. இவர் தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவர் அப்பப்போ சோசியல் மீடியாவில் இவரது புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பும். மேலும், இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement