அழுதபடியே நடிகை பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சன் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் பெங்களூரை சார்ந்தவர். ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதற்கு பின் ரைசா அவர்கள் மாடலிங் மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். அதன் மூலம் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
ரைசா வில்சன் நடித்த படங்கள்:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை இலன் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. காதல் நகைச்சுவையை மையமாகக் கொண்ட படம்.
ரைசா வில்சன் திரைப்பயணம்:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது. அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நாயகியாக நடிக்கவில்லை. அதற்குப்பின் இவர் சில திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருந்தார். இருந்தாலும், இவர் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ரைசா வில்சன்:
இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும், இவர் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சி புகைப்படங்கள் ஆகவே இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு சம்மன் கேப்சன் என்று தன்னுடைய பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
ரைசா வில்சன் புகைப்படம்:
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் அழுதபடி இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து, யாரும் தனியாக இல்லை. நாம் அனைவரும் படிப்படியாக அதை கண்டுபிடித்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லாம் கடந்து போகும், தைரியமாக இருங்கள் என்று ரைசாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.