இந்த நடிகர் தான் ரேவதியின் கணவரா. வைரலாகும் ரேவதியின் திருமண புகைப்படம்.

0
44589
Revathi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நடிகை ரேவதி அவர்கள் 1981 ஆம் ஆண்டு “மண்வாசனை” என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதிலிருந்து வரை மண்வாசனை ரேவதி என்று தான் நிறைய பேர் அழைப்பார்கள். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரேவதி அவர்கள் ஹிந்தி, ஆங்கில திரைப் படங்களை கூட இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

நடிகை ரேவதி அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் ரேவதி அவர்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும், 27 ஆண்டு காலமாக இவர்களுடைய வாழ்க்கையில் குழந்தை எதுவும் இல்லாததனால் தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவர்கள் இருவரும் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையும் பாருங்க ; விஜய்யும் அஜித்தும் எப்படி இருப்பார்கள். ஓப்பனாக பதில் அளித்த விஜய்யின் தாயார் ஷோபனா.

- Advertisement -

சுரேஷ் மேனன் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துளளார். சமீபத்தில் பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’ படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் நடிகர் சுரேஷ் மேனன். ரேவதியை நடிகர் சுரேஷ் மேனன் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். அதே போல நடிகை ரேவதியும் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நடிகை ரேவதி அவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகள் உள்ளார் என்ற தகவல் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. மேலும் இது அவருடைய உண்மையான குழந்தையா? இல்லை தத்தெடுத்து வழங்கப்பட்ட குழந்தையா? என பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன.

View this post on Instagram

Actress #Revathi With Her Husband #SureshMenon

A post shared by Behind Talkies (@behindtalkies) on

இதை முறியடிக்கும் வகையில் நடிகை ரேவதி அவர்கள் இதற்கான விளக்கத்தை அளித்து உள்ளார். அதில் ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள். அதற்காக நான் பல வருடங்களாக ஏங்கி இருக்கிறேன். அதோடு நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால், அனைவரும் இவளை நான் தத்து எடுத்து பிள்ளை என தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் பெற்றெடுத்த குழந்தை அவள் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement