பெண்குழந்தைகளுக்கான கல்வியை குஜராத் மேம்படுத்தியதா? தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜகவை விமர்சித்த நடிகை ரோகினி

0
421
- Advertisement -

மோடியை விமர்சித்து நடிகை ரோகிணி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி என்று கூட்டணி அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. தற்போது தமிழகம் முழுவதும் பிரபலங்கள் பலருமே தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை ரோகினி அவர்கள் திமுக கூட்டணியில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்திற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

பிரச்சார கூட்டத்தில் ரோகினி:

அதில் அவர், நம் நாட்டில் பெண்களுக்கு கல்வி என்பது ரொம்ப முக்கியம். நம்முடைய காலகட்டத்தில் ஆண்கள் படித்தால் போதும், பெண்களுக்கு படிப்பு எதற்கு என்றெல்லாம் இருந்தார்கள். பின் காலம் மாறும் போது பெண்களுக்கும் படிப்பு வேண்டும் என்று கட்டாயம் வந்தது. இதை அனைவரும் புரிந்து கொண்டார்கள். எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கான கல்வி ஒதுக்கீடு குறித்து கணக்கெடுத்து பார்த்திருக்கிறார்கள். அதில் குஜராத் மாநிலத்தில் வெறும் 27 சதவீதம் தான் பெண்களுக்கான கல்வி இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் மாநிலம் பெண் கல்வி குறித்து சொன்னது:

அதே அண்டை மாநிலமான கேரளாவில் 94 சதவீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய மாநிலத்திலேயே பெண்களுக்கு கல்வி முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் இந்தியா முழுவதும் எப்படி இதை செய்வீர்கள்? உங்களிடம் இல்லாத அதிகாரமா? நீங்கள் நினைத்திருந்தால் எல்லா அதிகாரத்தை வைத்து பெண்களுக்கான கல்வியை உயர்த்திருக்கலாம். ஆனால், நீங்கள் செய்ய வில்லை. அதை விடுத்து மற்றவர்களை குறை சொல்ல தேவையில்லை. நீங்கள் உங்கள் தொகுதியை சரியாக பாருங்கள் என்று மோடியை விமர்சித்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

ரோகினி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரோகினி. இவர் ஆரம்பத்தில் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

ரோகிணி குடும்பம்:

இதனிடையே இவர் தமிழ் சினிமாவின் வில்லன் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். பிரிவிற்கு பின் ரோகிணி தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை இவர் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் இவர் படங்கள், சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement