விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார்.
ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியல்:
கடந்த வாரம் சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் ஏற்பாடு நடக்கிறது. இதில் ரோகிணி தன் தந்தையை வர வைக்க வேண்டும் என்று விஜயா அடம் பிடிக்கிறார். இதனால் தன்னை பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ரோகிணி இருக்கிறார். இன்னொரு பக்கம் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள். விழாவில் முத்து சண்டைக்கு போகக்கூடாது என்று மீனா பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், ரோகினி எப்படியாவது முத்துவை குடிக்க வைத்து பங்ஷனை நிறுத்த திட்டம் போடுகிறார்.
கடந்த வாரம் நடந்தது:
ஒரு வழியாக ரோகிணி- ஸ்ருதி அம்மா விரித்த வலையில் முத்து விழவில்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் பங்க்ஷன் முடிந்தது. ஆனால், ரோகினியின் அப்பா வரவில்லை என்று விஜயா பயங்கரமாக ரோகினியை திட்டி விடுகிறார். மேலும், கடந்த வாரம் எபிசோட்டில் மீனா, ஸ்ருதி ரூமிற்கு செல்கிறார். அங்கு ஸ்ருதி கீழே போட்டு இருக்கும் மாலையை மீனா எடுத்து பார்க்கிறார். அப்போது மாலையில் தங்க செயின் இருப்பதை பார்த்து மீனா எடுக்கிறார். உடனே ரூமிற்கு வந்த சுருதி அப்பா, திருடி என்ன வேலை செய்கிறார்? இதுதான் உன் வேலையா? என்று மீனாவை மோசமாக பேசுகிறார்.
நேற்று எபிசோட்:
பின் அனைவர் முன்னாடியும் மீனாவை அசிங்கப்படுத்துகிறார். ஆனால் மீனா, நான் அதை செய்ய திருடவில்லை, சுருதியிடம் கொடுக்கப் போனேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். ஸ்ருதியின் அப்பா- அம்மா இருவருமே அதை ஏற்றுக் கொள்ளாமல் மீனாவையும் முத்து குடும்பத்தையும் மோசமாக பேசுகிறார்கள். இதனால் முத்து – ஸ்ருதியின் அப்பாவிற்கு அடிதடி அளவிற்கு சண்டை செல்கிறது. பின் ஸ்ருதி வீட்டிற்கு வரமாட்டேன் என்று அம்மா வீட்டிற்கு செல்கிறார். இதை எல்லாம் பார்த்த விஜயா, வீட்டிற்கு வந்த முத்து- மீனாவை பார்த்து வெளியே போங்க! நீங்கள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. நீங்கள் இல்லை என்றால் தான் சுருதி- ரவி வீட்டிற்கு வருவார்கள் என்று சொல்கிறார்.
சீரியல் ப்ரோமோ:
ஒரு வழியாக அந்த பஞ்சாயத்து முடிந்தது. பின் ரோகினி கர்ப்பமாக இருப்பதாக விஜயா நினைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறார். ஆனால், அவர் கர்ப்பம் இல்லை என்று தெரிந்தவுடன் மொத்த குடும்பமே சோகமாகிவிடுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மீனா, ஸ்ருதி இடம் பேச செல்கிறார். இன்னொரு பக்கம் முத்து, ரவியை பார்த்து பேசுகிறார். இருவருமே வீட்டிற்கு வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். மேலும், மீனா தன் பக்கம் நியாயத்தை சுருதியிடம் பேசுகிறார். இனி வரும் நாட்களில் ஸ்ருதி- ரவி மனது மாறி வருவார்களா? ரோகினியின் உண்மை முகம் வெளிவருமா? விஜயா என்ன செய்யப் போகிறார்? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.