என்ன வாழ வைத்த சென்னைக்கு என்னால முடிஞ்சது – 200 குடும்பங்களுக்கு பாலா செய்த உதவி. அவர் வைத்த வேண்டுகோள்.

0
265
- Advertisement -

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு நேரில் சென்று நிதியுதவி அளித்துள்ளார் பாலா. கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது.இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசியதில் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது. இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரபலங்கள் உதவி :

மேலும், நேற்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி- சூர்யா இருவரும் இணைந்து மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட ஒரு சில பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பண உதவி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

நிஷா செய்த உதவி :

வெள்ளித்திரை மட்டுமல்லாது சில சின்னத்திரை பிரபலங்கள் கூட தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அறந்தாங்கி நிஷா தனது காரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொடுத்துவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் Kpy பாலா அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க இருக்கிறார்.

பாலா செய்த உதவி :

இதுகுறித்து பேசிய அவர் ‘ என்ன வாழ வைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி. 2015ல் மழை வந்த போது செய்யணும்னு ஆசை இருந்தது ஆனா அப்போ காசு இல்ல. அதனால் தான் இப்போ என் அக்கவுண்டில் இருந்த சுமார் 2.15 லட்ச ரூபாயை எடுதது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000ரூ கொடுத்து இருக்கிறேன்’ என்று பேசி இருக்கிறார். ஏற்கனவே இலவச ஆம்புலன்ஸ், குழந்தைகளின் படிப்புக்கு உதவி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி, நலிந்த கலைஞர்களுக்கு உதவி என்று செய்து வரும் Kpy பாலா தற்போது செய்துள்ள இந்த உதவியும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Advertisement