தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. மாடலிங்கில் 500 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய சமந்தா தற்போது பல கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்து வருகிறது. மேலும், இந்த படத்தின் வெற்றியை சமந்தா திரையரங்கிற்கு வெளியே கொண்டாடி இருந்தார்.
சமந்தா படம்:
படத்தை பார்த்துவிட்டு பட குழுவினருடன் சேர்ந்து சமந்தா கேக் கொண்டிருந்தார். அந்த கொண்டாட்டத்தில் சமந்தா பார்ப்பதற்கு கர்ப்பமாக இருப்பது போலவே தெரிந்தது. பேபி பம்ப் எல்லாம் தெரிகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கமெண்ட் போட்டார்கள். ஆனால், சமந்தா எதுவும் சொல்லவில்லை. இப்படி இருக்கும் நிலையில் நடிகை சமந்தா அவர்களுடைய மா இண்டி பங்காரம் படத்தினுடைய சக்சஸ் மீட் நடைபெற்றிருக்கிறது.

சமந்தா கர்ப்பம்:
இதில் பேசிய போது சமந்தா, இன்னும் கொஞ்சம் நான் ஒரு சிறிய இடைவெளி எடுக்க போகிறேன். அதற்கு பிறகு நான் மீண்டும் வந்து விடுவேன். நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். இந்த தருணத்தில் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்று தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமந்தா திருமணம்:
இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோர் கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் தான் திருமணம் நடந்தது. இது இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள்.






