சித்தார்த்துக்கு முன்பே இருந்த காதல் – முதல் காதல், நண்பரின் மரணம். சமந்தாவின் உருக்கமான பதிவு.

0
1595
samantha

தென்னிந்திய சினிமா உலகில் 11 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Image result for samantha siddharth

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் தனது சினிமா பயணத்தின் 11 வது ஆண்டு நிறைவு பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

- Advertisement -

அதில் தன்னை அறிமுகம் செய்து வைத்த கௌதம் மேனனுக்கு நன்றி தெரிவித்த அவர், 11 ஆண்டுகளாக தனக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதே போல சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தா, பல்லாவரத்தில் பிறந்த என்னால் முடிந்தது என்றால் உங்களாலும் முடியும் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பல்லாவரம் வந்த போது அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

அதில், என்னுடைய மொட்டை மாடியில் இருந்து தெரியும் இந்த மலைதான் என்னுடைய பிடித்தமான இடம் மனிதர்களை விட என்னை பற்றி அதிகம் இதற்குத் தான் தெரியும் பரீட்சை நாட்களில் கவலையான காலைகள், நான் நிறைவேற்றாத பல வாக்குறுதிகள், முதல் காதல், முதல் நொறுங்கிய மனம், நண்பனின் இறப்பு, கண்ணீர், குட் பாய் அனைத்தும் இது அறியும் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement