தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார்.

இது நாம் அனைவரும் பட்டு ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் இவர் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரை எடுத்திருந்தார்.
சமந்தா திரைப்பயணம்:
இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சமந்தா அவர்கள் தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் சுபம் படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து சமந்தா அவர்கள் பங்காரம் என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தில் கதாநாயகியாக சமந்தாவே நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் Rakt Bramhand – The Bloody Kingdom என்ற வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தா பேட்டி:
இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து சமந்தா படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தா, நான் இப்போது முன்பு போல இல்லை. எல்லா விஷயத்திலும் தீவிரமாக இருந்த காலம் ஒன்று இருந்தது. நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது எனக்கு எது உண்மையில் ஆர்வமாக இருக்கிறதோ அதில் மட்டும்தான் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
சினிமா பற்றி சொன்னது:
அதில் ஒன்று உடற்பயிற்சி. இன்னொன்று படங்களில் நடிப்பது. நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால், அவை அனைத்திலும் நான் ஆர்வமாக ஈடுபடவில்லை. அதில் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே தீவிரம் இருந்தது. இப்போது நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும், நான் முதலீடு செய்யும் ஒவ்வொரு தொழிலும், நான் தயாரிக்கும் ஒவ்வொரு படமும் என் இதயத்திற்கு ரொம்ப நெருக்கமானவை. ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
View this post on Instagram
படங்கள் குறைவுக்கு காரணம்:
என்னுடைய மனதிற்கு நெருக்கமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறேன். என்னுடைய உடலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதால் என்னுடைய வேலையினுடைய அளவையும் குறைத்து விட்டேன். அதனால் கடமைக்காக அல்லாமல் என்னுடைய ஆற்றலை செலுத்தும் ஒவ்வொரு விஷயமும் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். அதனால் என்னுடைய திட்டங்களின் தரமும் நிச்சயமாக அதிகரித்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






