இரண்டு குழந்தைக்கு பின் ஏறிய உடல், உடல் கேலிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடையை குறைத்த சமீரா ரெட்டி

0
26819
sameera
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில நடிகைகள் மட்டுமே திருமணத்திற்கு பின் சினிமாவில் நிலைத்து நடித்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பின் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் ஆகிவிடுகின்றனர். அந்த வகையில் சமீரா ரெட்டியும் ஒருவர் தான். பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார். 

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-85.png
கடந்த மாதம் சமீரா போட்ட பதிவு

1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி அஜித் நடித்த சிடிஸின் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பலபடங்களில் நடித்து வந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.தனது 34 வது திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைக்கு தாயான சமீரா ரெட்டி பல மாதங்களாக எடை குறைப்பு பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் உடல் எடையை குறைத்துள்ளார்

இதுகுறித்து கடந்த மாதம் பதிவிட்டு இருந்த அவர் ,  “9 கிலோ குறைத்து விட்டேன், இறுதியாக கடின உழைப்பு பலனளிக்கிறது! 92 கிலோ உடல் எடையில் எனது எடை இழப்பு பயணத்தை துவக்கினேன்.  தற்போது அதிலிருந்து 9 கிலோ எடை குறைந்து 83 கிலோவில் உள்ளேன். இந்த பயணத்தை நாம் முழுமையாக முடிக்க இன்னும் 8 கிலோவை குறைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். தற்போது சொன்னதை போல ஒரே மாதத்தில் 10 கிலோவை குறைத்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement