கைவிட்ட கணவர், நீதிமன்றத்தில் மயங்கிய சரிதா – அவரின் கணவர் இந்த நடிகர் தான்.

0
299
- Advertisement -

தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் சரிதா. இவரை ‘மரோசரித்ரா’ என்ற படத்தில் பாலச்சந்தர் தான் அறிமுகம் செய்து இருந்தார். தனது முதல் படத்திலேயே தனி மேனரிஸம், முகபாவம், மற்றும் சிறப்பான நடிப்பால் சினிமாவில் முத்திரை பதித்தார். ஆனால், இவரின் நிறத்தை பலர் கிண்டல் செய்து இருந்தார்கள். தெலுங்கில் அறிமுகம் செய்து வைத்ததை தொடர்ந்து பின்னர் ‘தப்புத்தாளங்கள்’ படத்தின் மூலம் தமிழிலும் இவரை அறிமுகம் செய்து வைத்தார் பாலச்சந்தர்.

-விளம்பரம்-

அந்த படத்திலும் ஒரு அழுத்தமாக கதாபாத்திரத்தை மிகவும் அசால்ட்டாக கையாண்டு தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார் சரிதா. நடிப்பையும் தாண்டி இவருக்கு இன்னோரு பிளஸ்ஸாக அமைந்தது இவரது குரல் தான். ஸ்ரீவித்யாவுக்கு இருக்கிற மெச்சூரிட்டி குரலும் ஸ்ரீதேவிக்கு இருக்கிற இன்னசெண்ட் குரலும் சேர்ந்த கலவையாக சரிதாவின் குரல் இருந்தது. ஹீரோயின் வயதை கடந்ததும் சினிமாவை சரிதா விடவில்லை. பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்க துவாகினர். நக்மா, மதுபாலா, ரோஜா, சௌந்தர்யா, தபு, சிம்ரன், தேவயானி, சினேகா என்று பல தமிழ் நடிகைகளுக்கு சரிதா தான் டப்பிங் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடிகை சரிதா திரைப்பயணம்:

பின் சிறிய இடைவெளிக்கு பின் இவர் மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மாவீரன். இந்த படத்தில் சரிதா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. அது மட்டும் இல்லாமல் சரிதாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்ட பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே இவர் முதலில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் சுப்பையாவை கடந்த 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சரிதா திருமணம்:

அதன் பின்னர் இவர்கள் இருவரும் ஒரே ஆண்டில் பிரிந்துவிட்டார்கள். பின்னர் 1988ம் ஆண்டு மலையாள நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு சிரவன் மற்றும் தேஜாஸ் என்ற 2 மகன்களும் பிறந்தார்கள். பின்னர் 2011ம் ஆண்டு தனது இரண்டாவது கணவர் முகேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் சரிதா. சரிதாவை பிரிந்த முகேஷ் விவாகரத்து ஆன இரண்டு வருடத்தில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். விவாகரத்துக்கு பின்னர் சரிதா தனது மகன்களுடன் துபாயில் வசித்து வந்தார். இறுதியாக தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான சிலோன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

செய்யாறு பாலா பேட்டி:

அதன் பின்னர் 7 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இவரை காண முடியவில்லை. இந்த நிலையில் சரிதா விவாகரத்து குறித்து செய்யாறு பாலா பேட்டியில் கூறியிருப்பது, சரிதா மலையாள நடிகர் முகேஷ் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். அப்போதுதான் இருவருக்குமே காதல் மலர்ந்தது. பின் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆகி இவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்தது. நன்றாக தான் அவர்களுடைய வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி வெளியானது.

சரிதா விவாகரத்து காரணம்:

மேலும், இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது முகேஷ், என்னுடைய சினிமா சார்ந்த வாழ்க்கையில் சரிதாவின் தலையிடு அதிகமாக இருக்கிறது. யாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும்? நடிக்க கூடாது? எந்த கதையில் நடிக்க வேண்டும்? நடிக்க கூடாது போன்ற பல விஷயங்களில் சரிதா மூக்கை நுழைகிறார். அதனால் தான் நான் அவரை விட்டு விலக நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். பின் விவாகரத்து ஆகும் முன்பே முகேஷ் திருமணம் செய்து கொண்டார். இனி அவருடன் சேர்ந்து வாழ வேண்டாம் என்று நினைத்து சரிதா தன்னுடைய இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு துபாய் சென்று விட்டார். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தார். மூத்த மகன் டாக்டராக இருக்கிறான். இரண்டாவது மகனை நியூசிலாந்துக்கு அனுப்பி படிக்க வைத்தார். சரிதாவின் மூத்த மகனுக்கு சினிமாவில் மீது ஆர்வம் இருந்ததால் மலையாளத்தில் கல்யாணம் என்ற படத்தில் அறிமுகம் செய்தார். தற்போது சரிதா தன்னுடைய மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.

Advertisement