ஈரத்தையும் வீரத்தையும் அள்ளிக் கொடுக்கும் தென் மாவட்ட பகுதி – வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உதவும் நிஷா

0
503
Nisha
- Advertisement -

தென் மாவட்டங்களில், பல இடங்களில் கனமழை பொழிந்து வந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறந்தாங்கி நிஷா தொடர்ந்து உதவி செய்து வருகிறார். கடந்த சில வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், வெளிவர முடியாத சுழலில் ஏற்பட்டது. சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுது. இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

-விளம்பரம்-

புயல் கடந்து மழை படிப்படியாக குறைந்த போதிலும் பல்வேறு பகுதிகளில் தேங்கிய நீர் வெளியேற முடியாமல் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. பின்னர் படிப்படியாக நிலைமை சரியாகி மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை வெளுத்து வாங்கி இருந்தது.

- Advertisement -

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்துவந்தது . கடந்த 16 ஆம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து பொய்த்து வந்ததால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கனமழை அல்லது புயல் எச்சரிக்கை வந்தால் சென்னையில் உள்ள மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், முதன் முறையாக தென் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தால் பல ஊர்கள் ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சென்னையை விட தற்போது பெய்து வரும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் பிரபல நடிகை அறந்தாங்கி நிஷா அவர்கள் தனது கணவருடன் இணைந்து மக்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டிருந்தார்.  அந்த பதிவில் “ஈரத்தையும் வீரத்தையும் அள்ளிக் கொடுக்கும் தென் மாவட்ட பகுதி, இன்று அவர்களுடைய துன்பத்தில் தோள் கொடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

Nisha

இந்த நிலைமை நீங்கி மறுபடியும் அவர்கள் மீண்டு வர நாம் அனைவரும் தோள் கொடுப்போம்” என்று கூறியிருந்தார். நிஷாவின் இந்த மிகச்சிறந்த செயலுக்கு மக்களும், நெட்டிசன்களும் மனதார தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் மழை வந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி செய்து இருந்தார் நிஷா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement