‘பட்டத்தை வெல்பவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும்’ அர்ச்சனாவின் தம் அடிக்கும் பழக்கம் குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்

0
539
- Advertisement -

பிக் பாஸ் பட்டம் குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்

-விளம்பரம்-

அதே போல சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ட்ரெண்டிங்கான விஷயம் குறித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் பிக் பாஸ் பட்டத்தை யாருக்கு கொடுக்கலாம் என்றும் அர்ச்சனாவின் புகைபிடிக்கும் பழக்கம் குறித்தும் பேசி இருக்கிறார். பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசனில் தான் அதிக Wild Card போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். அந்த வகையில் இந்த சீசனில் Wild Card போட்டியாளராக நுழைந்து இருந்தார் அர்ச்சனா.

- Advertisement -

இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவர் பெரும் பிரபலமானது என்னவோ ராஜா ராணி தொடர் மூலம் தான். இந்த சீரியலில் வில்லியாக மிரட்டிய இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்கள் அழு மூஞ்சாக தான் இருந்தார். அதிலும், இவர் உள்ளே சென்ற ஒரு சில நாளிலேயே இவரை மாயா & கோ டார்கட் செய்து Bully செய்து வந்தனர். ஆரம்பத்தில் அவர்களின் கேலிகளுக்கு அழுத அர்ச்சனா, பின்னர் அவர்களுக்கு பதிலடி கொடுத்து ஓட வைத்தார்.

இதனால் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியது . மேலும், வார இறுதியில் இவருக்கு வரும் கைத்தட்டல்களை பார்த்து தான் செல்லும் பாதை சரி என்று புரிந்துகொண்டு விளையாடி வருகிறார் அர்ச்சனா. ஆனால், இவருக்கு ஆதரவு இருந்து வரும் அதே வேளையில் சில விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதில் மிக முக்கியமாக இவரது புகைபிடிக்கும் பழக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இதில் ஆண்கள் அடிக்கடி செல்வதை விட பெண்கள் தான் அடிக்கடி சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அர்ச்சனா தான் அடிக்கடி இந்த அறைக்குள் அடிக்கடி சென்று வருகிறார். இவர் செல்வது ,மட்டுமல்லாமல் மற்றவர்களையும் துணைக்கு அழைத்து செல்கிறார். இப்படி ஒரு நிலையில் அர்ச்சனாவின் புகைபிடிக்கும் பழக்கம் குறித்து பேசியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ‘அர்ச்சனா புகைப்படத்தை பெரிய விஷயம் கிடையாது. அவர் தம் அடிக்கும் விஷயங்கள் சமூக வலைதளத்தில் வைரலலானதால் இதுகுறித்து பேசுகிறார்கள். ஆனால் பட்டத்தை வெல்பவர்களுக்கு ஒரு நல்ல தகுதி இருக்க வேண்டும். அந்த வகையில் விசித்ரா, மணி, அர்ச்சனா, பூர்ணா மாயா என்று பார்க்கும் போது இவர்கள் யார் ஒரு நல்ல ரோல் மாடலாக இருக்க முடியும் என்று பார்க்கும்போது விசித்திராவிற்கு பட்டத்தை கொடுக்கலாம்.

Advertisement