வீட்டைவிட்டு வெளியேறிய சீதா – பார்த்திபனை எந்த கோலத்தில் திருமணம் செய்துள்ளார் பாருங்க. அரிய திருமணம் புகைப்படம்.

0
8772
parthiban
- Advertisement -

80களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடித்த ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை என பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. 80 ஸ் காலகட்டத்தில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சீதா, இவருக்கு படங்களில் நேரம் ஒதுக்க முடியாத நிலையால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை கூட இவர் ஒதுக்கி இருக்கிறார். நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை பாழாய் போனதற்கு முக்கிய காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான்.

-விளம்பரம்-

ஆண் பாவம் படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்தார் சீதா. அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், சீதாவின் வீட்டில் இவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால், சீதாவை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார் பார்த்திபன். ஆனால், சீதாவிற்கு வீட்டிலும் சரி வெளியில் வந்தாலும் சரி அவருடன் அவரது குடும்ப நபர்கள் பாதுகாப்பில் இருந்தனர்.

இதையும் பாருங்க : அடேங்கப்பா, வேற லெவல் Transformation – படு ஸ்லிம்மாக மாறியுள்ள பிரியாமணி.

- Advertisement -

அப்படியிருந்தும் சீதாவை பார்த்திபன் மாறு வேடத்தில் சென்று சந்தித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் சீதா, என் வீட்டார் தினமும் 2, 3 படங்களுக்கு என்னை ஒப்பந்தம் செய்து நடிக்கச் சொல்கின்றனர். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் அடுத்து நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று பார்த்திபனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் சீதாவை அந்த ஆண்டின் கடைசி முகுர்த்த நாளான 1989 டிசம்பர் 11 ஆம் தேதி எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் பார்த்திபன்.

ஏனென்றால் இன்னும் ஒரு மாதம் விட்டாலும் சீதாவின் அப்பா அவரை பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிடுவார் என்று எண்ணியுள்ளார் பார்த்திபன். இப்படி ஒரு நிலையில் சீதா படப்பிடிப்பிற்காக வெளியில் செல்ல இருந்த போது வீட்டிற்கு வெளியில் ஷூட்டிங் வண்டியை போல பார்த்திபன் தனது நண்பர்களுடன் காத்துகொண்டு இருந்துள்ளார். சீதாவும் பார்த்திபனுடன் காரில் ஏறி கிளம்பிவிட்டார்.

-விளம்பரம்-

பின்னர் அமைந்தகரை பகுதியில் இருந்த பார்த்திபனின் இன்னொரு நண்பரின் வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கேயே அவரது நண்பர்கள், சில பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பார்த்திபன்-சீதா திருமணம் மிகவும் எளிமையாக நடந்தேறியது. இப்படி பல போராட்டங்களுக்கு பின் நடைபெற்ற இவர்களது காதல் திருமணம் 2001 ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது என்பது தான் வேதனை.

Advertisement