ஒரே நாளைக்கே இத்தனை லட்சம் வாங்குனேன்,ஆனா ஒரு சொந்த வீடு கூட இல்ல. தான் ஏமாந்த கதை சொன்ன ஷகீலா.

0
2174
Shakeela
- Advertisement -

நான் ஏமாந்து விட்டேன், சொந்த வீடு கூட இல்லை என்று ஷகீலா அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். ஏன்னா, போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். பின் இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து இருக்கிறார்.

- Advertisement -

ஷகீலா திரைப்பயணம்:

மேலும், இளமை போன பின்னரும் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த இரண்டாம் சீசனில் ஷகீலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

நிகழ்ச்சியில் ஷகீலா:

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு சகிலா குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட பேச்சுலர் இளைனர்களுக்காக இரவில் போராட்டம் செய்து இருந்தார். இந்த நிலையில் வாடகை வீட்டில் இருப்பது குறித்து ஷகிலா அளித்து இருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஷகிலா அவர்கள் பேட்டி ஒன்றை அழுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

ஷகீலா அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியது, விக்கிபீடியாவில் சொன்னது போல் எனக்கு சொந்தமாக வீடு, பிஎம்டபிள்யூ கார் எதுவும் இல்லை. நான் 40 வருடமாக வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு நாளைக்கு நாலு லட்சம் வரை சம்பாதித்த காலம் எல்லாம் இருக்கிறது. நான் நடிப்பின் மூலம் நிறைய சம்பாதித்து இருந்தாலும் அவையெல்லாம் என்னுடைய சகோதரி எடுத்து சென்று விட்டார்.

தற்போதைய நிலைமை குறித்து சொன்னது:

வீட்டில் பணத்தை வைத்திருந்தால் வருமான வரி சோதனையில் சிக்கிவிடும் என்று நான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் என என்னுடைய தங்கை வாங்கி ஏமாற்றி விட்டார். அதனால் நான் மறுபடியும் பூஜ்ஜியத்தில் தான் என்னுடைய வாழ்க்கையை தொடங்கினேன். தற்போது நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement