திமிரு பட நடிகையா இது..? இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க! புகைப்படம் உள்ளே

0
29621
Actress-Shriya-reddy

தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷரியா ரெட்டி.ஹைட்ரபாத்தில் பிறந்த இவரது தந்தை பரத் ரெட்டி ஒரு கிரிக்கெட் வீரர்.

Shreya-reddy

சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த இவருக்கு தனது கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் வாய்ப்பு வந்தது.ஆனால் தன் தந்தையின் ஆசைபடி தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

அதன் பின்னர் தனது வலிமையான குரல் வளத்தினால் இவருக்கு எஸ் எஸ் மியூசிக் எனும் தனியார் தொலைக்கச்சையில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது.இவர் முதன்முதலில் திரையில் அறிமுகமானது விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் தான். அந்த படத்திற்க்கு பிறகு விஷாலுடன் இணைத்து நடித்த திமிரு படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத்தந்தது.

Actress-sriya-reddy

sriya-reddy

Sriya-reddy-actress

இவர் தமிழ் தெலுகு மலையாளம் என எல்லா மொழி படங்களிலும் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்த ப்ளாக் என்ற படம் இவரின் நடிப்பின் உட்சம் என்றே கூறலாம்.

அதன் பின்னர் ஷங்கர் தயாரித்த வெயில் ,2008 இல் பிரகாஷ் ராஜ் நடிப்பில் தேசி விருது பெற்ற காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்து பிலிம் ஃபேர் நாமினியாக பரிந்துரை செய்யப்பட்டார்.பின்னர் 2008 இல் நடிகர் விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

Actress-sriya-redy

shreyareddy_vikramkrishna

திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிடுத்த ஷரியா ரெட்டி 8 வருட நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்டவா காணோம் என்ற படத்தில் வில்லியாக நடித்துவருகிறார்.