ஆளே இல்லாத வீட்டிற்கு இத்தனை ஆயிரம் கரண்ட் பில் – டாப்ஸி வெளியிட்ட ஷாக்கிங் ஆதாரம்.

0
1190
taapsee
- Advertisement -

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர் அடுத்து படங்களில் நடித்து வந்தார். பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியது. பின் டாப்சீ தெலுங்கு,ஹிந்தி மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். நடிகை டாப்ஸி தற்போது பாலிவுட் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். வெயிட்டான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வீட்டில் முடங்கியிருக்கிறார். இந்த நிலையில் டாப்ஸி ஜூன் மாத மின் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார். காரணம் மின் கட்டணம் ரூ. 36 ஆயிரம் வந்து உள்ளது.

-விளம்பரம்-

தற்போது அந்த மின் கட்டண ரசீது புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார் டாப்ஸி. அதில் அவர் கூறியிருப்பது, 3 மாதங்கள் லாக்டவுன். இந்நிலையில் மின் கட்டணம் இந்த அளவுக்கு அதிகரிக்க புதிதாக எதை பயன்படுத்தினோம் அல்லது வாங்கினோம் என்று வியப்பாக உள்ளது. @Adani_Elec_Mum எந்த வகையான மின்சாரத்திற்காக எங்களுக்கு இந்த கட்டணம்.

- Advertisement -

யாருமே தங்காத அபார்ட்மென்ட்டுக்கு இந்த மின் கட்டணமா?. வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய மட்டுமே அந்த அபார்ட்மென்ட்டுக்கு செல்கிறோம். யாராவது எங்களுக்கு தெரியாமல் அந்த அபார்ட்மென்ட்டை பயன்டுத்துகிறார்களோ, அதை தெரிந்து கொள்ள நீங்கள் உதவி செய்துள்ளீர்களோ என்று கூறி உள்ளார்.
மேலும், நடிகை டாப்ஸியின் இந்த ட்வீட்டுகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் சிலர் நீங்கள் பிரபலமான நடிகை என்பதால் உங்கள் சம்பளத்தை கணக்கு போட்டு மின் கட்டண ரீடிங் எடுத்திருப்பார்கள் என்றும், அதாவது பயன்பாட்டை பொறுத்து அல்ல ஸ்டேட்டஸை பொறுத்து பில் போட்டு இருப்பார்கள் என்றும,. உங்களுக்கு மட்டும் இல்லை டாப்ஸி எங்களுக்கும் மின் கட்டணம் இப்படி தான் சம்பந்தமே இல்லாமல் அதிகமாக வந்திருக்கிறது என்றும் கமெண்ட் போட்டு உள்ளார்கள். இது போன்று பல பிரபலங்களின் வீட்டில் மின் கட்டண பில் அதிகமாகி உள்ளதாக குற்றசாட்டு எழுந்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement