வனிதாவின் மூன்றாவது கணவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகளா ? புகைப்படம் இதோ.

0
2291
vanitha

பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமணம் சனிக்கிழமை (ஜூன் 27 ) அவரது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. மேலும், பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார் அவரது மனைவி.

தனது முதல் மனைவியுடன் பீட்டர்

சமீபித்தல் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டரின் மனைவி, என் கணவருக்கு சரியான வருமானம் கிடையாது, அவருக்கு வேலை செய்யும் இடத்தில் எல்லாம் பழக்கம் இருக்கிறது. திருமண செய்தியை அறிந்து நான் கேள்விப்பட்ட போது நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல் நிலையத்திலேயே வனிதாவை பற்றி உனக்கு தெரியாதாம இன்னும் 6 மாசமோ ஒரு வருசமயோ தொரத்திவிட்ற போறாங்கனு சொன்னாங்க.

இதையும் பாருங்க : ஆளே இல்லாத வீட்டிற்கு இத்தனை ஆயிரம் கரண்ட் பில் – டாப்ஸி வெளியிட்ட ஷாக்கிங் ஆதாரம்.

- Advertisement -

மேலும், என் கணவரிடம் எனக்கு விவாகரத்து தறாமல் எப்படி திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டேன். மேலும், போலீஸ் நிலையத்திலும் நான் முறைப்படி விவாகரத்து பெறாமல் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டார்கள். ஆனால், அதை என்னிடம் கொடுக்கவில்லை. நானும் நம்பிவிட்டு விட்டேன். ஆனால், அதை எல்லாம் மீறி எந்த தைரியத்தில் கல்யாணம் பண்ணார் என்று கூறியிருந்தார்.

மகன் மற்றும் மகளுடன் பீட்டர்

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் வனிதாவும் தனது யூடுயூபில் வீடியோ ஒன்றை வெளியிடிந்தார். மேலும், பீட்டருக்கு ஏற்கனவே ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களது புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், வனிதா மற்றும் பீட்டர் விவகாரம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement