அடையாளம் தெரியாமல் மாறிப்போன காதல் தேசம் பட நடிகை தபு ! புகைப்படம் உள்ளே

0
2685
Actress-tabu

1971ல் ஹைதராபாத்தில் பிறந்தவர் தபு. இவரது முழு பெயர் தபாஸம் ஃபாத்திமா ஹாஸ்மி. இவருக்கு ஃபரா நாஸ் என்ற ஒரு அக்கா இருக்கிறார். இவரும் நடிகை தான். தபு தனது குடும்பத்தில் இரண்டாவது பெண் குழந்தை. இவரும் பெண் குழந்தையாக பிறந்ததால் அவரது அப்பா ஜமாலுக்கு தபுவை பிடிக்கவில்லை. இதனால் தனது அம்மாவிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்றுவிடடார் அப்பா ஜமால்.

tabu

அதன்பின்னர் அவரது அம்மாதான் இவர்களை வளர்த்தார். அம்மா ரிஸ்வானா ஒரு ஸ்கூல் டீச்சர். இதனால் அதில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் இவரது குடும்பம் ஓடியது.

அக்கா ஃபரா நாஸுக்கு தபுவை பிடிக்காது. ஏனெனில் அவருக்கு முன் தபுவிற்கு பட வாய்ப்பு கிடைத்துவிட்டது. மேலும், இதற்காக பலமுறை தன்னை தனது அக்கா பழி வாங்கியதாக கூறியுள்ளார் தபு.

Actress-tabu

தமிழில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம், 2000த்தில் வெளிவந்த அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் தபு. கிளாமராகவும் தயங்காமல் நடித்துள்ளார் தபு. இவர் நடித்த ஹிந்தி படங்கள் பெரும்பாலும் ஹிட். மலையாளத்தில் வெளிவந்த செம்ம ஹிட் ஆன ‘த்ரிஷ்யம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து அசத்தியுள்ளார் தபு.

Tabu-actress

தற்போது ஹீரோயினாக இல்லை என்றாலும் கதைக்கு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் தபு. தன்னை தன் அப்பாவிற்கு பிடிக்காததால் சிறு வயதில் இருந்தே தனிமையை உணர்ந்து வாடிவந்த தபு, தன் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதை மதிப்பதில்லை. இதன்காரணமாக 46 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் தபு.