அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய தமன்னா. காரணம் இது தானாம்.

0
1353
tamanna
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா . 2005 ஆம் ஆண்டு சந் சா ரோஷன் செகரா என்னும் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ என்ற படத்தில் தமன்னா அவர்கள் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடிகை தமன்னா நடித்து உள்ளார். மேலும், நடிகை தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் தான் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

-விளம்பரம்-
Image result for tamanna reading book

- Advertisement -

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு நடிகை தமன்னா அவர்கள் வெங்கடேசுடன் நடித்த எஃப் 2 படம், தமிழில் உதயநிதியுடன் கண்ணே கலைமானே படம், விஷாலின் ஆக்ஷன் படம், பெட்ரோமாக்ஸ் படம், தெலுங்கில் சயிரா நரசிம்ம ரெட்டி போன்று பல படங்களில் நடித்து இருந்தார். சமீப காலமாகவே இவருடைய படங்கள் எதுவும் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்பட வில்லை. தற்போது நடிகை தமன்னா அவர்கள் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். அதே போல சினிமா நடிகர்களுடன் இதுவரை எந்த காதல் கிசுகிசுவிலும் நடிகை தமன்னா சிக்க வில்லை.

இதையும் பாருங்க : மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸ்சுடன் காட்டிற்குள் செல்லப்போகும் ரஜினி. வீடியோ உள்ளே.

12 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை தமன்னா. தற்போது இவருக்கு 30 வயது ஆகிறது. இவருடைய திருமணம் குறித்து வீட்டில் மும்முரமாக மாப்பிளை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவலும் வந்து உள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா அவர்கள் தன் வாழ்க்கையை மாற்றிய புத்தகங்கள் குறித்து ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து கூறி உள்ளார். அதில் அவர் கூறியது, நான் பொதுவாகவே அதிகமாக புத்தகங்களைப் படிக்க மாட்டேன். இருந்தாலும் நான் படித்த இரண்டு புத்தகங்கள் தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது.

-விளம்பரம்-
Image result for tamanna eating chicken

‘ஓஷோவின் உண்மையான பெயர்’ என்ற புத்தகம் படித்தேன். இந்த புத்தகம் படித்த பிறகு தான் எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடும், தாக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து ரோரி ப்ரீட்மேன் மற்றும் கிம் பர்னூயின் எழுதிய ‘பிட்ச்’ என்ற புத்தகத்தை படித்தேன். இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் நான் அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவத்துக்கு மாற தோன்றியது. இப்படி இந்த இரண்டு புத்தகங்கள் மூலம் தான் என்னுடைய வாழ்க்கையை மாறிவிட்டன என்று மனம் திறந்து பேசினார்.

தற்போது பாலிவுட்டில் நவாசுதின் சித்திக் ஜோடியாக தமன்னா அவர்கள் “போலி சூடியான் ” படத்தில் நடிக்கிறார். ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடித்து உள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளிவர தயாராக உள்ளது. தமிழில் பெரியதாக வாய்ப்புகள் இல்லை. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடிகை தமன்னா தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

Advertisement