தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஆகையால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாகவும் பாக்கியலட்சுமி திகழ்கின்றது.
இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ள கதை. தற்போது இந்த சீரியலில் கோபி இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார். உண்மை தெரிந்தவுடன் கோபியின் அப்பா மனமுடைந்து மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பேச முடியாமல், நடக்க முடியாமல் போகிறது. செழியன் பாக்கியாவிடம் சண்டை போட்டு தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த கோபி, இதுதான் சாக்கு என்று ராதிகா வீட்டிற்கு போய் தங்குகிறார்.
பாக்யலக்ஷ்மி தொடரின் கதை:
செல்விக்கு கோபி மீது அதிகமாக சந்தேகம் வருகிறது. இதை எழிலிடம் சொல்கிறார். இதை எழில் கண்டு பிடிப்பாரா? கோபி ராதிகாவை திருமணம் செய்வாரா? இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாக, தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது.
சீரியலின் இந்த வாரம் ப்ரோமோ:
தொடரில் பாக்கியா கணவர் கோபி எப்போது மாற்றிக்கொள்வார்? முக்கியமாக ராதிகாவிடம் எப்போது மாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சீரியலில் இந்த வாரத்திற்கான புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் செழியன் தனக்கு திருமணம் செய்தது பிடிக்கவில்லை. விவாகரத்து செய்யலாம் என்று தோன்றுவதாக கூறினார். இதனால் கோபமடைந்த பாக்கியா தனது மகனை பளார் என்று அடித்து பயங்கரமாக திட்டுகிறார்.
பாக்கியா குறித்த ஸ்பெஷல் செய்தி:
இதை பார்த்த கோபி அதிர்ச்சியில் இருக்கிறார். அவருக்கே சொல்வது போல உணர்கிறார். இந்த எபிசோடை பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தநிலையில் பாக்கியா குறித்த ஸ்பெஷலான தகவல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், பொதுவாகவே Barc இந்தியா என்பது சீரியல்களின் டிஆர்பி விவரத்தை வெளியிடும் லிங்க். அதேபோல் தான் Ormax என்பது சின்னத்திரையில் கலக்கும் தொடர்களின் கதாபாத்திரம் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளால் பிரபலமானவர்களின் விவரத்தை வெளியிடும் பட்டியல்.
Ormax பட்டியலில் பாக்கியா பிடித்து உள்ள இடம்:
இந்த நிலையில் கடந்த வாரத்தின் படி பாக்யலக்ஷ்மி தொடரின் முக்கிய கதாபாத்திரமான பாக்கியா இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தை சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரில்லா, மூன்றாவது இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்கும் வினுஷா தேவி பிடித்திருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி தொடர்ந்து. இதை பார்த்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.