சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் படங்களை ரீ-ரிலீஸ் செய்வதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜயின் கில்லி, ரஜினியின் படையப்பா, அஜித்தின் மங்காத்தா போன்ற படங்களெல்லாம் ரீ-ரிலீஸ் செய்தும் மிக அளவில் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் தற்போது திரிஷா- சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.

இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் தான் மௌனம் பேசியதே. இந்த படத்தில் சூர்யா, திரிஷா, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பே மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் பற்றி சூர்யா, லைலா பேசிய வீடியோ எல்லாம் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது.
மௌனம் பேசியதே ரீ ரிலீஸ்:
இந்நிலையில் தற்போது இது தொடர்பாக பேசிய நடிகை திரிஷா, என்னுடைய முதல் படம் மௌனம் பேசியதே. இந்த படம் பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாகுவதால் இந்த படம் ரொம்ப ஸ்பெஷலாக இருக்கிறது. எப்போதுமே இந்த படம் எனக்கு ஸ்பெஷலான படம். காரணம், இந்த படத்தில் இருந்து தான் எனக்கு எல்லாமே தொடங்கியது.
View this post on Instagram
திரிஷா வீடியோ:
என்னுடைய முதல் வருட சினிமாவில் அமீர் சாருடன் பணியாற்றி இருக்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு போது வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்தது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் கருப்பு பட ரிலீசும் சூர்யாவுடன் தான் நடக்கிறது. லைலா உடன் பணியாற்றும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். படத்தை பாருங்கள், என்ஜாய் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார்.

திரிஷா குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சுமார் 23 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் இவர் இன்றும் புதுமுக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார்.






