1. என்னுடைய நண்பர் ஒருவர் விஜயை பார்க்க அழைத்துச் சென்றார்
2022 காலகட்டத்தில் திரு.விஜய் அவர்களை சந்திக்க என்னுடைய நண்பர் ஒருவர் உங்களை ஒரு முக்கியமான VIP பார்க்கவேண்டும் என்று சொல்லி, ரொம்ப கவனமாகவும், பாதுகாப்பாகவும் என்னை அழைத்துச் சென்றார்கள், வீட்டிற்குள் சென்ற பிறகு கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, நான் அவருடைய பனையூர் இல்லத்திற்கு இதுவரை சென்றதில்லை, வீட்டிற்குள் சென்று பார்த்தால் விஜய் இருக்கிறார்,

2. ஜனங்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்
அன்று கிட்டத்தட்ட 4 மணி நேரம் வரை இருவரும் பேசிக்கொண்டோம், அப்போதுதான் அவர் அரசியலுக்கு வர விரும்புகிறேன் என்றார், நான் உடனே கேட்டேன் 1000 கோடி ரூபாய் வியாபாரம் உங்களை நம்பி இருக்கிறது, இன்னும் 5 வருடங்களுக்கு நீங்கள்தான் நம்பர் 1 ஹீரோ, உங்களை விட திறமையான நடிகர்கள் வந்தாலும் உங்கள் அளவுக்கு வளர்ந்து வர குறைந்தது 5 வருடங்களாவது ஆகும் என்று சொன்னேன், ஜனங்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்றார்,
3. காங்கிரஸ் கட்சியில் சேர்த்துவிடுங்கள் என்றேன்
சரி சார் நீங்கள் சென்று காங்கிரஸ் கட்சியில் சேர்த்துவிடுங்கள் என்றேன், ராகுல் காந்தி உங்களுக்கு நண்பர், உங்களை முதலமைச்சராக அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு தயக்கம் இருக்காது 26-ல் நீங்கள்தான் CM என்றேன், இல்லை நான் தனியாக கட்சி தொடங்க ஆசைப்படுகிறேன் என்றார், அப்படியானால் நீங்கள் சினிமாவை விட வேண்டும் என்றேன்,

4.2 குதிரையில் சவாரி செய்வதை தயிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றேன்
நீங்கள் என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் 2 குதிரையில் சவாரி செய்வதை தயிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றேன், இன்னும் ஒரு படம் இருக்கிறது சினிமாவை விட்டுவிடுகிறேன் என்றார்,
5.உதயநிதி தான் எனக்கு போட்டியாக இருப்பார் என்று கூறினார்
2026-ல் எனக்கு யார் போட்டியாக இருப்பார் என்று கேட்டார், நான் எடப்பாடி பழனிசாமி என்று கூறினேன், இல்லை உதயநிதி தான் எனக்கு போட்டியாக இருப்பார் என்று அவர் கூறினார், நான் ஒரு வழி சொன்னால் இல்லை என்று என்னுடைய பாதையில்தான் நான் செல்வேன் என்கிறார், அந்த உறுதித்தன்மைதான் இப்போது அவரை இந்த இடத்தில் வந்த அமர வைத்திருக்கிறது







