பண்ண இப்படி திருமணம் பன்றேன் – இல்லனா சிங்கிளாவே இருந்துட்டு போறேன். திரிஷா பளீர் பேட்டி.

0
1277
trisha
- Advertisement -

தமிழ், தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் வரை நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. பல புதுமுகங்களின் வரவால் கடந்த சில வருடங்களாக அவருடைய மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தார்.தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயமும் நடந்து, பின்னர் கருத்து வேறுபாடால் அது திருமணம் வரை செல்லாமல் நின்று விட்டது.முன்னணி நடிகையாக இருந்த போது த்ரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் செய்தி வந்தது.

-விளம்பரம்-
வருண் மற்றும் திரிஷாவின் நிச்சயதார்த்த புகைப்படம்

ஆனால், வழக்கம் போல இருவரும் நண்பர்கள் என்று சொல்லி வந்தனர்.ஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள் என அவர்கள் இருவரும் ஜோடியாக வந்து சென்றனர். த்ரிஷாவின் நிச்சயம் நடந்த பின் அவர்களைப் பற்றிய கிசுகிசுவுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. திருமணம் நின்ற பின் மீண்டும் ராணா – த்ரிஷா பற்றிய காதல் செய்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன.

- Advertisement -

அவ்வளவு ஏன் இவர் டேட்டிங் செய்து வந்த ஆர்யாவிற்கு கூட சமீபத்தில் திருமணம் நடைபெற்று விட்டது. அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ராணாவிற்கு கூட திருமணம் நடைபெற்றது. தற்போது 37 வயதாகும் திரிஷா இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள திரிஷா, தனது திருமணம் குறித்தும் தனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர்  ” என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்ளும் நபரை திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை நான் நேரில் சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, நான் சிங்கிள் தான். அதை பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே சிங்கிளாகவே இருந்து விடுவேன். சிங்கிளாக பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன் “. என்று கூறியுள்ளார் திரிஷா.

-விளம்பரம்-
Advertisement