-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இந்த முறை தான் சரியா டைட்டில் கொடுத்து இருக்கீங்க – சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வென்றது யார் தெரியுமா?

0
510

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் நிகழ்ச்சிகள் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த போட்டியாளர்கள்

இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம்.

சூப்பர் சிங்கர்:

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு தான் இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 9 நிகழ்ச்சி:

கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 ஜூன் மாதத்திலேயே ஆரம்பமாகி இருக்கிறது. இந்த சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

நிகழ்ச்சி டைட்டில் வின்னர்:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்கள் பலருமே தங்களுடைய திறமையை சிறப்பாக வெளிக்காட்டிருந்தார்கள். தற்போது நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் போட்டியாளரான ஸ்ரீநிதா, ஷிவாத்மிகா , ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வருமே இணைந்து ஒரு அட்டகாசமான பாடலை பாடி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளர் தமிழ் மற்றும் இமான் மூலமும் பல குழந்தைகளுக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும், இந்த சீசனில் ஸ்ரீநிதா டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். இவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பரிசாக கிடைத்து இருக்கிறது. பொதுவாகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனவர்கள் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழும். பட்டம் தகுதியானவர்களுக்கு கொடுப்பதில்லை, இது சேனல் செய்யும் ஏமாற்று வேலை என்றெல்லாம் விமர்சித்து நெட்டிசன்கள் கமெண்ட் போடுவார்கள். ஆனால், இந்த முறை சரியான நபருக்கு தான் பட்டம் சென்றிருப்பதாக கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news