தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் டோலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படத்திலிருந்து திடீரென விலகியுள்ளார்.
இந்த தகவல் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பரவி வருகிறது. நடிகை திரிஷா அவர்கள் தற்போது மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். திரிஷ்யம் என்ற படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார். இதனிடையே தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார் திரிஷா. இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடிப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கு ஜோடியாக இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருக்கிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த திரிஷா அவர்கள் இந்த படத்தில் இருந்து தான் திரிஷா விலகி விட்டதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார், அதில், சில நேரங்களில் ஆரம்பத்தில் செல்வது ஒன்று, பின்னர் நடப்பது ஒன்றாக இருக்கிறது. படக்குழு உடனிருந்த சில கருத்து வேறுபாடு காரணமாக நான் இந்த படத்திலிருந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளேன். இந்த படம் நன்றாக வர படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருந்தார்.
திரிஷாவின் இந்த திடீர் விலகல் முடிவுக்கு காரணம் வேறு சில முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் நாயகிகள். இவர்களுடன் நடிக்கையில் தனக்கு முக்கியத்துவம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் த்ரிஷா ஆச்சார்யா படவாய்ப்பை மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை திரிஷாவிற்கு தெலுங்கில் உதிரி வேடங்களே வருவதால், அங்கு நடிப்பதில்லை என்று த்ரிஷா முடிவெடுத்ததாகவும், அதன் காரணமாகவே அவர் சிரஞ்சீவியின் ஆச்சார்யாவில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.