Home பொழுதுபோக்கு சமீபத்திய

ரஜினி,கமல் படங்களில் நடித்த இந்த நடிகை யார் தெரியுதா? பாத்தா நீங்களே அசந்துடுவீங்க.

0
106
Tulasi
-விளம்பரம்-

கமலஹாசனுக்கு தங்கையாகவும் ரஜினிகாந்துக்கு மகளாகவும் நடித்த நடிகை ஒருவர் இயக்குனர் தன்னிடம் காலையில் காதலை தெரிவித்த நிலையில் மாலையில் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டது திரையுலகினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் முக்கிய கேரக்டரில் நடித்து பிறகு அம்மா வேடம் வரை நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை துளசி. கர்நாடகாவை சேர்ந்த இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து தெலுங்கில் முக்கிய கேரக்டர்களில், தங்கை, மகள் போன்ற கேரக்டரில் நடித்தார். இவரது நடிப்புக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. கடந்த 1982ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சகலகலா வல்லவன் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனின் தங்கை கேரக்டரில் நடித்திருப்பார். இவரது கேரக்டர் தான் படத்தின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான நல்லவனுக்கு நல்லவன் என்ற கேரக்டரில் ரஜினியின் மகளாகவும், கார்த்திக்கின் காதலியாகவும் நடித்திருப்பார். கமல்ஹாசன், ரஜினி மட்டுமின்றி பல பிரபலங்களின் படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் பிரபல கன்னட இயக்குனர் சிவமணி என்பவர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சாய்பாபாவின் பக்தை என்ற காரணத்தினால் அவர் மீது சிவமணிக்கு தனி ஈர்ப்பு ஏற்பட்டது.

-விளம்பரம்-

ஒரு நாள் படப்பிடிப்பின் போது நான் உன்னை காதலிக்கிறேன் என்று இயக்குனர் சிவமணி சொன்ன நிலையில் அவரை ஏற்கனவே முழுமையாக தெரிந்து வைத்திருந்த துளசி உடனே திருமணத்திற்கு சம்மதித்தார். இருவரும் அன்று மாலையே கோவிலில் சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். ஒரு சில வாரங்கள் கழித்து தான் இரு வீட்டாருக்கும் இந்த திருமணம் தெரிய வந்ததை அடுத்து இருவீட்டாரும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.

-விளம்பரம்-


இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். சாய் தருண் என்ற அவர் தற்போது தெலுங்கு திரையுலகில் இயக்குனராக உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து முற்றிலும் நடிப்பதை நிறுத்திவிட்ட துளசி நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு சில படங்களில் அம்மா கேரக்டரில் நடிக்க வந்தார். குறிப்பாக விஷாலின் ‘ஆம்பள’, சசிகுமாரின் ‘ஈசன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் அவர் துர்கா என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு நாயகியாகி அதன் பிறகு திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீஎண்ட்ரி ஆன துளசி தற்போதும் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இப்போது 50 வயது ஆகிறது. இவர் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.அந்த வகையில் துளசி அவர்கள் ஒரு பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் சீனு உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் சீனுவை துளசி அன்போடு டார்லிங் டார்லிங் என்று அழைத்திருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பிரபாஸ் சீனு- துளசி இருவரும் காதலிக்கிறார்கள் என்று சோசியல் மீடியாவில் தேவையில்லாத செய்தியை பரப்பி இருந்தனர். இதுகுறித்து விளக்கமளித்த சீனுவாசன் ‘ 50 வயது வித்தியாசம் பார்க்காமல் எப்படி இவ்வாறு வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.துளசி எனக்கு அம்மா போன்றவர்.எங்களை பற்றி பரவிய வதந்தியை என் மனைவியிடம் சொன்னேன். இதைக் கேட்ட அவர் சிரித்தார்.இது போன்ற வதந்திகளை அவர் காதில் வாங்கிக் கொள்வது கூட இல்லை என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news