‘ஒரே ராத்திரியில் நடுத்தெருவுக்கு வந்துட்டோம்’ – தன் வாழ்வில் பட்ட கஷ்டத்தை சொன்ன வடிவுக்கரசி.

0
630
Vadivukarasi
- Advertisement -

ஒரே ராத்திரியில் நடுத்தெருவுக்கு வந்துட்டோம் என்று மன வேதனையில் நடிகை வடிவுக்கரசி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்பது காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் வடிவுக்கரசி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரைக்கும் 350 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் தொலைக்காட்சி தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கதாநாயகியும் பின்னர் குணசித்திர வேடத்திலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பழமொழி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை வடிவுக்கரசி அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய நடிப்பு அனுபவம் மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை குறித்து கூறியிருந்தது, நான் puc படித்து இருக்கிறேன்.

- Advertisement -

வடிவுக்கரசி அளித்த பேட்டி:

படித்து முடித்ததும் ஒரு ஸ்கூலில் எல்கேஜி யுகேஜி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக என்னுடைய பயணம் தொடங்கியது. அப்போது என்னுடைய மாத சம்பளம் 70 ரூபாய். ஆனால், நாட்கள் செல்ல செல்ல என்னுடைய சம்பளம் குடும்ப தேவைகளுக்கு பத்தவில்லை. அதன் பிறகு நான் ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அதுமட்டுமில்லாமல் ஒரு மேனேஜ்மென்டில் ஹவுஸ் கீப்பிங் வேலையும் செய்தேன். ஆனால், இப்படி நாங்கள் கஷ்டப்படுவதற்கு முன்பு எங்களுடைய குடும்பம் பெரிய அளவில் வசதியாக தான் இருந்தது.

வாழ்வில் பட்ட கஷ்டங்கள்:

அப்பா திரை துறையில் இருந்தார். சித்தப்பாவும் திரை துறையில் இருந்தார். திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தான் எங்களுடைய வாழ்க்கை ஒரேடியாக மாறிவிட்டது. ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம். அதற்கு பிறகு தான் நாங்கள் வேலை தேடி அலைந்தோம். தொடர்ந்து மாறி மாறி பல வேலைகளை செய்து கொண்டிருந்தோம். அப்போது தான் பேப்பரில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தை பார்த்து தான் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும், விடாமுயற்சியுடன் வாய்ப்புகளுக்கு காத்துக் கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

குடும்பம் குறித்து சொன்னது:

அது மட்டுமில்லாமல் எனக்கு காதல் சீன் வராது, டான்ஸ் ஆட வராது. இதனால் நான் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்தேன். மேலும், என்னுடைய திருமண வாழ்க்கையும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. என்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம். என்னுடைய ஒரே மகளை என்னுடைய அம்மா தான் வளர்த்து வந்தார். அவரிடம் என்னுடைய குழந்தையை கொடுத்துவிட்டு நான் அடிக்க வந்தேன்.

தன் பிள்ளை குறித்து சொன்னது:

என்னுடைய குழந்தையை என்னால் சரியாக வளர்க்க பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் என்னுடைய மகளின் பிள்ளையை நான் பார்த்து வளர்த்து வருகிறேன். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழுங்கள். யாரையும் கட்டாயப்படுத்தாதீர்கள். ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழுங்கள் என்று சிரித்த முகத்துடன் அறிவுரை கூறியிருந்தார்.

Advertisement