என்னை அடிச்சாரு… ஆபாசமா பேசினாரு..! – நடிகை வனிதா கண்ணீர் வாக்குமூலம்.!

0
1105
vanitha
vanitha
- Advertisement -

காவல் துறையினர் என்னை அடித்து ஆபாசமாகப் பேசி துன்புறுத்தினர்” என்று நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா கண்ணீர் மல்க கூறினார்.

-விளம்பரம்-

vanitha

- Advertisement -

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வனிதா, “அது எங்கள் அம்மா வீடு. மஞ்சுளா ஹவுஸ் என்பது வீட்டின் பெயர். ஷூட்டிங் அங்கதான் எடுப்போம். நான் தற்போது `டாடி’ என்ற படத்தை இயக்கிவருகிறேன். நிறையப் படத்தின் ஷூட்டிங் அந்த வீட்டில் எடுத்திருக்கிறார்கள். `டாடி’ படத்தின் 20 நாள் ஷூட்டிங் அங்குதான் நடைபெற்றது. எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் நடந்தது. இப்படியிருக்க, திடீரென என் அப்பா விஜயகுமார் என்னை மிரட்டி வேறு வீட்டுக்குச் செல்லச் சொன்னார். நான் கணவர் இல்லாமல் தனியாக மகளுடன் இருக்கிறேன். தினமும் அவர் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். வீட்டை வாடகைக்கு விடுவதாகச் சொன்னார். வீடு காலி செய்தே ஆக வேண்டும் என்று என்னைத் தொல்லைசெய்துவந்தார். நான் வாடகை தருகிறேன் என்றுகூட சொன்னேன். அவர் கேட்கவில்லை.

என்னை வெளிய அனுப்ப குறியாக இருந்தனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இது என் அம்மா வீடு. என் பணமும் இந்த வீட்டில் உள்ளது. என்னைத் தொந்தரவு செய்யாமல், வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளேன். இதனிடையே, போலீஸிடம் பேசிய அப்பா, இன்ஸ்பெக்டரிடம் எஃப்ஐஆர் பதிவு பண்ணச் சொல்லியுள்ளார்.

-விளம்பரம்-

Actres vanitha

அதன் எதிரொலியாக, நேற்று மாலை நாங்கள் அமர்ந்து படம்குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, மதுரவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் 15 போலீஸார் வந்து அங்கிருந்தவர்களை அடித்துக் கைதுசெய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் என்னை அடித்தார். நான் தடுமாறிக் கீழே விழுந்தேன். ஆபக்சமாகத் திட்டி என்னை வெளியே அனுப்பத் திட்டமிட்டார். என்கவுன்டரில் சுடுவதாகக் கூறி மிரட்டினார். நான் வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என்று கூறிய என்னை வாசலில் இழுத்துச் சென்று போலீஸார் போட்டனர். போனை பிடிங்கிவிட்டார்கள். இது வாடகை வீடல்ல. என் சொந்த வீடு. என் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் இந்த முகவரிதான் உள்ளது. நான் என்ன தப்பு செய்தேன். எனக்கு நியாயம் வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

Advertisement