குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக ஒரு போட்டியாளர் விளக்கியுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.
குக் வித் கோமாளி 4 :
இப்படி பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சின் சீசன்6 கடந்த 22ஆம் தேதி 105 நாட்கள் மிகவும் பிரம்மாண்டமாக ஓடி நிறைவடைந்தது இதில் அசீம் வெற்றியடைந்தார். பிக் பாஸ் சீசன் எப்போதும் போல சுவாரசியமாக சென்றதினால் அதிக பார்வையாளர்கள் விஜய் டிவி பக்கம் இருந்தனர்.இந்நிலையில் விஜய் டிவியில் அந்த பார்வையாளர்களை தக்கவைத்துக்கொள்ள அடுத்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர்.
கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் :
அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்துகேயன் பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார். இதில் முதல் வாரமே அந்த அறிவிப்பும் இன்றி ஓட்டேரி சிவா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும் வெளியேறிய குக் :
இதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 4ல் மூன்று வாரங்கள் முடிந்து தற்போது 6 எபிசோடுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று 7வது எபிசோடு ஒளிப்பரப்பாக இருக்கிறது. கடந்த வாரம் கிஷோர் ராஜ்குமார் வெளியேறிய நிலையில், இந்த வாரம் இம்யூனிட்டி வாரம் என்பதினால், இம்யூனிட்டி பேண்ட்டை வாங்க மற்ற போட்டியாளர்கள் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறியுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
விசித்ரா வெளியேற்றம் :
சின்னத்திரை வட்டாரங்களில் கிடைத்த தகவலின் படி நடிகை விசித்ராதான் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை விசித்ராவின் குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்த காரணத்தினால் தான் நடிகை விசித்ரா வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் வெளியேறிய நிலையில் மீதமுள்ள 8 போட்டியாளர்கள் தான் இந்த வாரம் இம்யூனிட்டி டாஸ்க்கில் விளையாட இறுகின்றனர் என்று கூறப்படுகிறது.