இளவரசரை திருமணம் செய்ய போகிறாரா வித்யு ராமன்..! அரண்மனை முன்பு சபதம்.! புகைப்படம் உள்ளே

0
1204
Actress Vidyullekha Raman

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவை சேர்ந்த நடிகையான மேகன் மார்கல் இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் ஹாரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னர் மேகன் மார்கல் லண்டன் அரண்மனைக்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

Vidyulekha Raman

அதில் “22 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அரண்மனைக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன், இப்போது இந்த அரண்மனைக்கு நான் தான் இளவரசி “என்று ஆனந்தத்தில் பெருமிதம் கொண்டார். இந்நிலையில் அதே மாதிரி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஒரு பிரபல நடிகை.

சமீபத்தில் அரை குறை ஆடையில் தனது புகைப்படத்தை வெளியிட்டு மறந்து விட்ட தனது ரசிகர்களை நான் இன்னும் இருக்கிறேன் என்று நினைவு படுத்தி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் காமெடி நடிகை வித்யு ராமன். அவர் வெளியிடட அந்த புகைப்படத்தை பார்த்து அவர்மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்தன.

இந்நிலையில் லண்டன் அரண்மனைக்கு முன்பு தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை வித்யு ராமன், மேலே உள்ள புகைப்படத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் மேகன் மார்கல் எடுத்துக் கொண்ட புகைப்படம், கீழே 22/05/2018 ஆண்டு நான் எடுத்துக் கொண்ட புகைப்படம். எனவே, நான் ராணியாக 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.