இதனால் தான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. காரணத்தை சொன்ன நடிகை விஜயசாந்தி.

0
49035
vijayashanthi
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவருடைய படங்கள் எல்லாமே அதிரடி, ஆக்ஷன் படங்கள் தான். அது மட்டுமில்லாமல் ஒரு பெண் இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இரங்குவார் என்பதை இவர் படத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதோடு இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தேசிய விருது, திரைப்பட தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

மேலும், நடிகை விஜயசாந்தி அவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்தவர். இவர் 1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து இருந்தார். பின்னர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டு அரசியல் தொடங்கினார். மேலும், 2009 ஆம் ஆண்டு மேடக் தொகுதியில் போட்டி போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் நடிகை விஜயசாந்தி. பின்னர் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து 2014 ஆம் ஆண்டு வெளியேறி காங்கிரசுடன் இணைந்து கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீடித்து வருகிறார்.

நடிகை விஜயசாந்தி 13 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது நடிகை விஜயசாந்தி அவர்கள் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் மகேஷ் பாபு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை விஜய சாந்தி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் குழந்தை பெற்றுக் கொள்ளாதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, எனக்கு சினிமாவில் நல்ல கதைகள் அமையாததால் தான் நான் நடிக்காமல் இருந்தேன். நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

-விளம்பரம்-
Related image

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள். அதனால் தான் நடிக்க ஓகே சொன்னேன். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நான் ஆண்டு ஒன்றிரண்டு படங்களிலாவது நடித்து இருப்பேன். மேலும், எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்து விடும். சுய நலம் இருந்தால் அரசியலில் பொதுத் தொண்டு செய்ய முடியாது. எனவே தான் என் கணவரிடம் குழந்தைகள் வேண்டாம் என்று கூறினேன். அவரும் என்னை புரிந்து கொண்டு சரி என்று ஒத்துக் கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் தான் சுயநலமின்றி மக்களுக்காக தொண்டு செய்தவர். அவரைப் போல அரசியலில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.

நடிகர் மகேஷ் பாபு அவர்கள் ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் இவர் ராணுவ வீரராக நடித்து உள்ளார். இவர் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை விஜயசாந்தி அவர்களும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத், ரோகிணி உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். ரத்தினவேலு என்பவர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படம் ஜனவரி மாதம்11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement