தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வினோதினி வைத்தியநாதன். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். இவர் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் காமெடி ரோல் மட்டுமில்லாமல் வில்லியை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இவர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் கலந்து கொண்டிருந்தார். பின் கடந்த ஆண்டு தான் இவர் அந்த கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் விஜய்யின் கட்சியை விமர்சித்து பேட்டி கொடுத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில்
தற்போது வினோதினி லவ் ஷேர் சப்ஸ்கிரைப் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
வினோதினி குறித்த தகவல்:
தற்போது இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அப்போது செய்தியாளர் ஒருவர் தவெக மீது நீங்கள் தொடர்ந்து விமர்சனம் வைப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு வினோதினி, அவர் ஒரு இடத்தில் இருக்கிறார். அந்த இடத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்பதற்காக தான் அந்த விமர்சனத்தை வைக்கிறேன்.
https://www.youtube.com/watch?app=desktop&v=1_A2_ByUVag
வினோதினி பேட்டி:
விமர்சனம் என்பது ஆதங்கத்தில் இருந்து வெளிப்படுவது. நான் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் என் மீது விமர்சனம் வைத்தால் அவர் மீது நான் கோபப்படக்கூடாது. எதற்காக அவர் என்னை விமர்சனம் செய்கிறார் என்பதை தான் பார்க்க வேண்டும். நான் கேரவனுக்குள்ளே இருந்தால் நடிக்க முடியாது. நான் படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டும். அதுபோல அவரும் வெளியே வந்து மக்களுக்காக பணி செய்யட்டும். செய்தியாளர்களை சந்திக்கட்டும். அந்த நாள் என்னுடைய விமர்சனம் நிறுத்தப்படும்.

விஜய் பற்றி சொன்னது:
ஒரு துர் சம்பவம் நிகழ்ந்த போதும் அங்கிருந்து குரல் வரவில்லை. நாம் தான் இங்கு ஆதங்கப்பட்டு கொண்டிருக்கிறோம். இப்போதும் நீங்கள் என்னை தான் கேள்விக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.






