பிக் பாஸ் சங்கத்த கூட்டுங்க..! ஐஸ்வர்யாவை காப்பாத்த திட்டம் தீட்டும் பிக்பாஸ்.! பிக்பாஸ் 1 போட்டியாளர் அதிரடி

0
561
Aishwarya
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 2விற்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள் இருந்து வருகின்றனர். சீசன் ஒன்றை விட சீசன் 2 ஏதோ பிக் பாஸே திட்டமிட்டு நடத்தி வருவதுபோல இருக்கிறது என்பது தான் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

அதிலும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் வாரா வாரம் காப்பாற்றபட்டு வருவது தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இந்த வாரம் யாஷிகா தலைவர் ஆக்கிவிட்டதால் அவர் இந்த வாரம் தப்பித்துவிட்டார். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வார்யாவை , பிக் பாஸ் எப்படியும் காப்பற்றி விடுவாரா என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகையும், முன்னாள் போட்டியலுருமான நடிகை ஆர்த்தி ஐஸ்வர்யா காப்பற்ற திட்டம் போடுகிறார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,பிக் பாஸ் சங்கத்தை கூட்டுங்க , இப்போ ஐஸ்வர்யாவை காப்பாத்த பாக்கராங்க. ரித்விகா, ஜனனி வேற லெவல் என்று ட்வீட் செய்துள்ளார். நடிகை ஆர்த்தியின் இந்த பதிவை கண்ட அனைவருமே அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐஸ்வர்யாவை பல முறை பிக் பாஸ் காப்பற்றி வருகிறார், அவர் மீது என்ன கரிசனம் என்று தெரியவில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த பதிவில் ரித்விகா மற்றும் ஜனனி பேசியதை(ஐஸ்வர்யா நாமினேஷனில் மக்களை சந்தித்து விட்டு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிலைத்தால் ஐஸ்வர்யா பிக் பாஸ் பட்டத்திற்கு தகுதியுடையவர் என்று கூறியிருந்தனர்) குறித்தும் பாராட்டியுள்ளார் நடிகை ஆர்த்தி. ஜனனி மற்றும் ரித்விகா கூறியது போலவ இத்தனை வாரங்கள் ஐஸ்வர்யா பிக் பாஸ் மூலம் தான் காப்பற்றுபட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாமினேஷனில் வந்தால் கண்டிப்பாக வெளியேற்றபட்டுவிடுவார் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

Advertisement