சேது படத்தில் விக்ரமுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இவர்தான்..! வெளிவந்த பலநாள் ரகசியம்

0
1148
vikram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விக்ரம், கடின உழைப்பு பிறகே உச்சநட்சத்திரம் என்ற பெயரை பெற்றார். 1990 ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தாலும் நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு காத்துக் கொண்டிருந்தார்.

vignesh

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்தே “சேது” என்ற தனது முதல் ஹிட் கொடுத்தார் நடிகர் விக்ரம். இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்திற்க்கு பிறகே நடிகர் விக்ரமிற்கு சீயான் என்ற பட்டம் கிடைத்தது. விக்ரம் அவர்களுக்கு திருப்புமுனை படமாக இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் விக்னேஷ் தான்.

90ஸ் கால கட்ட சினிமா ரசிகர்களுக்கு இவர் மிகவும் ஒரு பரிட்சியமான ஒரு நடிகர் என்றே கூறலாம். தற்போது பாடலாசிரியர் பா. விஜய் நடித்துள்ள “ஆருத்ரா ” என்ற படத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய நடிகர் விக்னேஷ் “சேது” படத்தின் சுவாரசியமான தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.

vignesh actor

Actor vignesh

இயக்குனர் பாலாவும் இவரும் அறை நண்பர்களாக இருந்துள்ளனர். பாலா இயக்கிய “சேது ” படத்தில் நடிகர் விக்னேஷ் தான் நடிக்கவிருந்ததாக இருந்த்துள்ளது. ஆனால், சில பல காரணங்களால் அந்த படத்தில் நடிக்கமுடியாமல் போய்யுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது இன்று வரை வருத்தலமளிக்கும் ஒரு விடயமாக உள்ளது என்று நடிகர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனது நண்பர் பாலா ஒரு வெற்றி இயக்குனராக இருந்து வருவது தனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார் விக்னேஷ்.